வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (15/04/2016)

கடைசி தொடர்பு:14:24 (15/04/2016)

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு டாஸ் போடுவாரா ரஜினி? - இது புது கோரிக்கை

நடிகர்சங்கம் சார்பில் நட்சத்திரிகிரிக்கெட் போட்டி ஏப்ரல் 17 அன்று முழுநாள் நடக்கவிருக்கிறது. அதற்காக நடிகர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதும் நடிகர்சங்கநிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்வதும் என பரபரப்பாக இருக்கிறார்கள்.

நடிகர்சங்கத்தலைவர் நாசர் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக்கடிதத்தில், “தங்களுக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது குறித்து நாங்கள் பெருமிதத்துடன் மகிழ்வு கொள்கிறோம், தாங்கள் மென்மேலும் விருதுகளும் பெருமைகளும் பெறவேண்டுமென மனதார வாழ்த்துகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

அதோடு, தாங்கள் ஏப்ரல் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் விழாவில் கலந்துகொள்ள அசைந்ததற்கு மிக்க நன்றி.  காலை பத்துமணிக்கு தொடங்க இருக்கும் விழாவை தாங்களும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களும் துவங்கிவைக்க வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். மாலை ஏழு மணிக்கு பத்மவிபூசன் விருது பெற்றமைக்காக மக்களரங்கில் பாராட்டும் தெரிவிக்க ஆசைப்படுகிறோம். தங்கள் வருகையை பேராவலோடு எதிர்பார்க்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்”.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்