வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (15/04/2016)

கடைசி தொடர்பு:18:59 (15/04/2016)

“நம்மை சுற்றியிருக்கும் பெண்கள் பற்றியான கதையே இறைவி” விஜய்சேதுபதி

வித்தியாசமான கதைத்தளத்துடன் பிட்சா, ஜிகர்தண்டா என்று படத்திற்கு படம் வெரைட்டி காட்டும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் இறைவி.

விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மற்றும் அஞ்சலி நடித்திருக்கும் இப்படத்திற்கான டீஸர், டிரெய்லரே இப்படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியது, இந்நிலையில்  சந்தோஷ்நாராயணன் இசையில் இறைவி படத்திற்கான இசை இன்று வெளியாகியிருக்கிறது.

இறைவி படத்தைப் பற்றி விஜய்சேதுபதி கூறும்போது, “ ஆண்களின் உலகத்தைச் சுற்றியிருக்கிற மனைவி, காதலி, சகோதரி, அம்மா என்று இவர்களின் கதையே இறைவி. நாம் கவனிக்காமல் விட்ட இவர்களின் மறுபக்கக் கதையே இப்படம். நாம் அவர்களை சரியாகக் கவனி்க்காமல் விட்டுவிட்டோமா என்று படம் முடிந்து வெளியே வரும் அனைவருக்குள்ளும் ஓர்  ஆதங்கத்தை ஏற்படுத்தும்.  எத்தனையோ படங்களில் நடித்துவிட்டாலும், இறைவி முதல் காட்சியில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் ஆசை என்கிறார் விஜய்சேதுபதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்