விஜய்யின் தெறி..ஷாருக்கின் ஃபேன் எது பெஸ்ட்.... இந்தவார ஃப்ளாஷ்பேக்! #WeeklyViral | Viral of this week Tv Cinema #WeeklyViral

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (16/04/2016)

கடைசி தொடர்பு:16:35 (16/04/2016)

விஜய்யின் தெறி..ஷாருக்கின் ஃபேன் எது பெஸ்ட்.... இந்தவார ஃப்ளாஷ்பேக்! #WeeklyViral

இந்த வாரம் நம் ஹார்ட் பீட்டுகளை எகிற வைத்த  வைரல்கள் இதோ!

ரம்பமே ஆரவாரமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 24 பட இசை வெளியீடு இந்த வாரம். பாடல்கள் மியூசிக் சார்ட், ஆன்லைன் என பட்டையைக் கிளப்பி வருகிறது.. சூர்யா, ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன் என ஆடியோ லான்ச் செம கலர்ஃபுல் மொமெண்டாக மாறின...காலம் என் காதலியோ..ஓ...ஓ..!

24 பட இசை வெளியீட்டு விழா கலர்ஃபுல் ஆல்பத்திற்கு க்ளிக்கவும்

24 பட இசை வெளியீட்டில், தப்பான படம் நானே குடுத்தாலும் ஜெயிக்க வைக்காதிங்க இப்படி சூர்யா செம போல்ட் எதார்த்தம் காட்ட சினிமா உலகினருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பாடல் ஒலித்தது...அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவரேன்னு!

 சூர்யா என்ன சொன்னக் குட்டிக் கதைக்கு: க்ளிக்கவும்

குடும்பப் படமாகவே இருந்தாலும் சிம்பு படம் என்பதற்காக சென்சார் ஏ கொடுத்து விடுவார்களோ என்ற சந்தேகம் கிளம்பியது. ஆம்... தி ஜங்கிள் புக் படத்துக்கே யு/ஏ கொடுத்த உள்ளங்களாயிற்றே என வெயிட் செய்தால் கிடைத்தது யு, கூடவே நீங்களும் போங்கப்பா என திருநாள் படமும் யு சான்றுடன் ரிலீசுக்குக் காத்திருக்கிறார்கள்... ரிலீஸ் பண்ணிடுவீங்களா! 

ஹாரிஸ் - கே.வி.ஆனந்த் கூட்டணி இல்லையா? என்ற கேள்வியில் இருந்த ரசிகர்களுக்கு விடையாக வந்தது கே.வி,ஆனந்த் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி தான் மியூசிக் என்ற செய்தி. விஜய் சேதுபதி நடிக்கும் இப்படம் விரைவில் லைட்ஸ் ஆனாகவிருக்கிறது.  தனி ஒருவன் மாதிரி ஹிட் கொடுப்பாரா.. இல்லை.. குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் கொடுப்பாரா? வெய்ட்டிங்!

விஜய் படம் ரிலீஸ் ஆகிடுச்சு.... அடுத்து அட்லீ என்னப்பா பண்ணப்போறாரு என்றால் தெலுங்கு லோகத்தில் மகேஷ் பாபுவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்ற செய்தி கிட்டியது. தெறிக்க விடுங்க அட்லீ!

ருவழியாக தெறி பிரச்னை முடிவுக்கு வந்து ரிலீஸானது என கோலாகலமாகக்  கொண்டாடிய ரசிகர்களுக்கு வருத்தமாக செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸில் சிக்கல். தயாரிப்பாளர், தியேட்டர் விநியோகஸ்தர்கள் பஞ்சாயத்தில் தெறி ரிலீஸ் இன்னமும் சிக்கலில் தான் இருக்கிறது... ஒருவேளை கமல் படம் ரிலீஸ் ஆகாததுனால விஜய் படமோ! 

 செங்கல்பட்டில் தெறி வெளியாகாதது ஏன்? தாணு குற்றச்சாட்டும் திரையரங்குத் தரப்பு பதிலும் - முழுமையான செய்திக்கு

ங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடிப்பில் 2.ஓ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவது நாம் அறிந்ததே.இந்நிலையில் படம் 3டியில் உருவாகி வருகிறது என்னும் செய்தி ரசிகர்கள் காதில் தேனாகப் பாய்ந்துள்ளது.. அது சரி ஃபர்ஸ்ட் டே ஃபஸ்ட் ஷோவுல 3டி கண்ணாடி தப்பிக்குமா?

னிதன் பட சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்... ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்துக்காக ஒரு கதை சொல்லியிருக்கிறார். அவரிடம் பேசி வருகிறோம். ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக நான் தயாரிப்பேன் எனக் கூறவே வைரலாகியுள்ளது. வத்திக்குச்சி பத்திக்குமா!

என்ன சொன்னார் உதயநிதி ஸ்டாலின் முழுமையாகப் படிக்க: 

தெறி படத்தை பாலிமர் டிவி திருட்டுத்தனமாக படம்பிடித்தார்கள் எனக் கூற கொஞ்சம் பஞ்சாயத்தானது. இந்நிலையில் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படம் தியேட்டர் உதவியுடனேயே பதிவிட்டு டிவிடி வெளியானதே அப்போது எங்கே போனார்கள் இதே காவல்துறை... தாணு உடைத்தால் பொன் சட்டி நான் உடைத்தால் மண் சட்டியா எனக் கொஞ்சம் ஆவேசமானர் ஜே.எஸ்.கே.சதீஷ்...அரசியல்ல இதெல்லாம் சாதரணமுங்க!

ண்களின் உலகத்தைச் சுற்றியிருக்கிற மனைவி, காதலி, சகோதரி, அம்மா என்று இவர்களின் கதையே இறைவி எனச்சொல்லி ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளார் விஜய் சேதுபதி... விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா இந்த உலகத்துக்கு எதுனா சொல்லுவாரு கார்த்திக் சுப்புராஜ்!

விக்ரம் பிரபுவின் வாகா, அரவிந்த் சாமியின் ‘டியர் டாட்’, ப்ரித்வி ராஜினி ஜேம்ஸ் & அலைஸ் , இறைவி இப்படி டிரெய்லர்கள் ஒரு பக்கமும், சச்சின், சுல்தான், இந்திரஜித், என டீஸர்களும் இணைந்து இந்த வாரம் கலர்ஃபுல்லாக மாறியுள்ளது.

விக்ரம் பிரபுவின் ‘வாகா’ டீஸர் :http://bit.ly/25ZUcbI 

இறைவி டெர்ய்லருக்கு:http://bit.ly/22zc5K7 

இந்திரஜித் டீஸருக்கு :http://bit.ly/1SRn8cq 

 ட்சத்திர கிரிக்கெட்டுக்கு அஜித் வருவாரா வர மாட்டாரான்னு கேள்வி அடங்கி இப்போது ரஜினி சார் நீங்கதான் துவக்கி வைக்கணும். ஆனா டைமுக்கு வரணும்னு சொல்லியிருக்காங்க சங்க வாசிகள்...வந்தா டைமுக்கு வரப்போறாரு!

 

நட்சத்திர கிரிக்கெட் அணிகள் அறிமுகம்! கலக்கல் ஆல்பத்திற்குக் க்ளிக்கவும்

தோ இந்த வாரம் ஸ்பெஷலாக மாஸாக தெறி மற்றும் ஃபேன் ரிலீஸ் எது பெஸ்ட் என்றால்... தெறி மாஸ்... ஃபேன் பக்கா மாஸ் என்கிறது சினிமா வட்டாரம்.. விஜய்யின் தெறி மேக்கிங் தரம்.. ’ஃபேன்’ மாஸ் ஹீரோக்களே இப்படி ஒரு படம் பண்ணுங்கள் என க்ளாஸ் எடுக்கிறது.. ஓம் விஜய் ஃபேன்ஸாய நமக!

 துப்பாக்கி மிலிட்டரியை ஓவர்டேக் செய்திருக்கிறதா 'தெறி' போலீஸ்..?! - தெறி விமர்சனத்திற்குக் கிளிக்கவும்

 அஜீத்தோ, விஜய்யோ இப்படி ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? - ஷாருக்கின் FAN விமர்சனம்

- ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்