நடிகர்சங்க நிலத்தில் புதிய படத்தொடக்கவிழா- கமல் அறிவிப்பு

 

 தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். முதன்முறையாக கமல் மகள் ஸ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 29ம் தேதி தொடங்குகிறது என கமல் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

படத்தின் தொடக்கவிழாவை நடிகர்சங்கக் கட்டிடம் இருந்த இடத்தில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். எங்களுடைய 41 ஆவது படத்தின் தொடக்கவிழாவை எங்கள் குடும்ப இடமான நடிகர் சங்க மைதானத்தில் நடத்த இருக்கிறோம். சங்கத்துக்கு நன்றி என்று கமல் தெரிவித்திருக்கிறார். நடிகர்சங்க நிலத்தில் விழா நடக்கவிருப்பதால் நடிகர்சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நடிகர் பட்டாளம் விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் விழா பிரமாண்ட விழாவாக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். கமல் இங்கு படத்தொடக்கவிழாவை நடிகர்சங்க இடத்தில் நடத்துவதால் சங்க நிர்வாகிகள் எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!