வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (18/04/2016)

கடைசி தொடர்பு:15:25 (18/04/2016)

மீண்டும் ரஜினியை சீண்டினாரா ராம் கோபால் வர்மா?

ட்விட்டரில் அடிக்கடி சர்ச்சை கமெண்டுகளைக் கொட்டி மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களை சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது ராம் கோபால் வர்மாவின் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு. அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், ராஜமௌலி, பிரபாஸ், சிரஞ்சீவி என இவர் விட்டுவைக்காத ஆட்களே இல்லை. இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்.

சமீபத்தில் எமி ஜாக்சன் 2.ஓ படத்தளத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர , அதை வைத்து ரஜினி குறித்து பல ட்வீட்டுகளை போட்டுள்ளார். எப்போதும் பல மாஸ் ஹீரோக்களை உண்மையில் கிண்டலடித்து ட்வீட் போடும் ராம் கோபால் வர்மா இம்முறை கிண்டலடிப்பது போல் ரஜினியை பாராட்டியுள்ளார். ஆனால் இதைத் தவறாகப் புரிந்துகொண்ட ரசிகர்கள் கொந்தளித்து ராம் கோபால் வர்மாவை திட்டி வருகிறார்கள்.

அவர் பதிவிட்ட ட்வீட்டுகள் பின்வருமாறு:

” ஒரு நட்சத்திர அந்தஸ்துடன் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை இந்த மாபெரும் மனிதர் 

அழித்து விடுவார்”..

” நல்ல தோற்றம் இவருக்கில்லை, சிக்ஸ் பேக் இல்லை , சரியே இல்லாத உடல்வாகு. டான்ஸில் கூட இரண்டரை அளவே மூவ்மெண்ட்ஸ் தெரியும்”..

”உலகில் எங்கும் இப்படி ஒரு தோற்றம் கொண்ட மனிதரால் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது, கடவுளுக்கு இவர் என்ன செய்தார், கடவுள் இவருக்குதான் என்ன செய்தார்”..

”சினிமாவில் பார்வையாளர்கள் ஏன் ,எதை ரசிக்கிறார்கள் என்பதற்கு ரஜினி சார் சரியான சாட்சி”...

”உலகின் மிகப்பெரிய உளவியல் நிபுணர் கூட குழம்பிவிடுவார் ரஜினியின் தோற்றம் குறித்து விளக்கச் சொல்லி சவால் வைத்தால்”

இதையெல்லாம்  சொல்லி முடித்த ராம் கோபால் வர்மா, ரஜினிகாந்தின் சூப்பர் ரசிகர்கள் நான் அவரை புகழ்ந்துள்ளேன் என்பதைப் புரிந்துகொள்ளவே இல்லை. கண்டிப்பாக ரஜினிகாந்த் இதை உணர்ந்து ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை திட்டித் தீர்த்து வருகிறார்கள். கிண்டல் பேசுவதெல்லாம் பேசிவிட்டு புகழ்ந்தேன் என்றால் எப்படி எனக் கேட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க