வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (19/04/2016)

கடைசி தொடர்பு:11:32 (19/04/2016)

மீண்டும் வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டது - வடிவேலு படம் ஆரம்பம்

வடிவேலு கதாநாயகனாக நடித்து தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் வந்தன. அவை அவருக்குக் கைகொடுக்கவில்லை. அதன்பின்னர் சில படங்களில் அவரை நகைச்சுவை வேடத்தில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.

இப்போது அவர் விஷால் நடிக்கும் புதியபடமொன்றில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதோடு முதலில் கதாநாயகனாக நடிக்க வைத்த சிம்புதேவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாகச் சொல்லப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு வெளியான “இம்சைஅரசன் 23ம் புலிகேசி” படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்தப்படத்தின் இரண்டாம்பாகத்தை இப்போது எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே சிம்புதேவனும் வடிவேலுவும் மீண்டும் இணையப்போகிறார்கள் என்று பேச்சுகள் வந்தன. அப்படி எதுவும் நடக்கவில்லை.
 
அதற்குக் காரணம், இம்சைஅரசன் படத்துக்குப் பிறகு சந்தானம் மற்றும் கஞ்சாகருப்பு ஆகியோரை நாயகர்களாக வைத்து சிம்புதேவன் படம் இயக்கியதுதான் காரணம் என்பார்கள்.
 
இப்போது அவற்றை மறந்து இருவரும் இணையவிருக்கிறார்கள் என்றும் இம்முறை நிச்சயம் அது நடக்கும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தப்படத்தை இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கவிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது நடந்துவிட்டது.
 
லைகா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜுமகாலிங்கம், ‘வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேலை வந்துவிட்டதா? எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா இணைகின்றன. பொழுதுபோக்கு நிச்சயம்’ என்று டிவீட் செய்திருக்கிறார். இதன்மூலம் இந்தப்படம் எடுக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க