வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (19/04/2016)

கடைசி தொடர்பு:11:42 (19/04/2016)

படவாய்ப்பு இல்லாதபோதுதான் அவர்கள் அருமை தெரிந்தது!- நெகிழ்ந்த கமல்

விக்ரம்பிரபு, புதுமுகம் ரன்யாராவ் ஆகியோர் நடிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாகா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டுப் பேசினார் கமல்.

நிகழ்ச்சியில் பிரபு பேசும்போது, எங்கள் அப்பா சிவாஜி கமல் அண்ணனைக் கையில் வைத்துக்கொண்டு பிள்ளைக்குத் தந்தை ஒருவன் என்று பாடினார், அதற்கேற்ப எங்கள் குடும்பத்தின் மூத்தபிள்ளையாக அவர் இருந்துகொண்டிருக்கிறார் என்று பேசினார்.

அதன் பின்னர் கமல் பேசும்போது, இது என்னுடைய குடும்பம், இதனால் நிச்சயம் நான் இருப்பேன், நேரில் வரமுடியாவிட்டால் ஸ்கைப்பிலாவது பேசிவிடுவேன்.

சிவாஜி அவர்கள் என்னைக் கையில் வைத்துக்கொண்டு பிள்ளைக்குத் தந்தை ஒருவன் என்று பாடியதாகச் சொன்னார். அப்போதெல்லாம் எனக்கு அவர்களுடைய பெருமை, உயரம் ஆகியன தெரியாது. மூன்று மூன்றரை வயதில் என்ன தெரியும்? எம்.ஜி.ஆர் மாமா சிவாஜி மாமா ன்னு இருக்காங்க அவங்களோட போய் விளையாடலாம் அவ்வளவுதான் தெரியும்.

ஏழு எட்டு வயதில் சினிமா வாய்ப்பு எதும் இல்லாமல் திரையரங்கு வாசல்களில் நிற்கும்போதுதான் இவர்கள் யார்? இவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்கள்? என்பதெல்லாம் புரிந்தது.

அதன் பின்னர் அன்னைஇல்லத்துக்கு வெளியே இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அன்னை இல்லத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்குமா? என்று ஏங்கிய நாட்கள் உண்டு. அனுமதியும் அன்பும் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம் என்று பேசினார்.      

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்