நயன்தாரா நடிக்கும் பேய் படத்துக்கு கமல் பட டைட்டில்?

பேய் பட மோகம் இன்னும் தமிழ் சினிமாவை விட்ட பாடில்லை. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் பேய்ப் படங்களில் நடிப்பதில் அதீத ஆர்வம் எழுந்துள்ளது. சென்ற வருடம் வெளியான ‘மாயா’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது.

ஆதரவற்ற இளம் தாயாக நயன்தாராவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் த்ரில்லர், ஹாரர் படமொன்று விரைவில் உருவாகவிருக்கிறது, இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் ஹாரர் என சொல்லப்பட்டாலும் மறுபக்கம் த்ரில்லர் மட்டுமே எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்திற்கு பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த த்ரில்லர் படமான டிக் டிக் டிக் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இதுவரை இல்லாத அளவு நயன்தாரா வித்யாச நடிப்பை வெளிப்படுத்தவிருக்கிறாராம்.டிக் டிக் டிக் படத்தின் மேக்கிங்கும், ஹிட்டும் நாமறிந்ததே அதே வெற்றியை தக்க வைக்குமா இந்த டிக் டிக் டிக்? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!