விஜய் ட்வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை! - மறுக்கிறார் அமீர்

தெறி படத்தால் நஷ்டமடைந்தேன் என்று இயக்குநர் அமீர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் என்று பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அமீர் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்திற்கான மதுரை பகுதி விநியோக உரிமையை இயக்குநர் அமீர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அமீரின் ட்விட்டரில், “ தெறியின் மதுரை பகுதி விநியோக உரிமையை வாங்கினேன். ஆனால் தெறி படத்தால், 50% அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கிறேன்” என்று இயக்குனர் அமீர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. 

அந்த ட்விட்டர் பதிவிற்கு பதில் கடிதம் ஒன்றை அமீர் வெளியிட்டுள்ளார். அதில்,

விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன்.

எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கம் நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன். என்னுடைய பெயரில் இருக்கும் முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெர்வித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!