நாங்கள் கொள்ளைக்காரர்கள் இல்லை! தெறி விவகாரம், தாணு ஆவேசம்!

தெறி படம் செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டாரங்கள் என சுமார் 60 திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் படத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். அவர் பேட்டி பின்வருமாறு,

தமிழகத்தில் வெளியான அனைத்து திரையங்குகளிலும் தெறி வசூல் சாதனையைப் பெற்றுள்ளது. ஆனால் செங்கல்பட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட திரையரங்கு உரிமையாளர்களால், அந்தப் பகுதிகளில் வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள்தான் காரணம்.

செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த  பன்னீர் செல்வமே காரணம். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் பன்னீர்செல்வம் தான் பிரச்னை கொடுக்கிறார். அவரது மகன் திருமணத்திற்கு ரஜினி, விஜய்,  போகவில்லை. அதை மனதில் வைத்தே இப்படியெல்லாம் செய்கிறார்கள்.

நான் படத்தை சத்யம், ஐநாக்ஸ், பி,வி,.ஆர், பல திரையரங்குகளில் வெளியிட்டுள்ளேன். ‘அங்கெல்லாம் நீங்கள் போடும் ஒப்பந்தத்தை ஏன் எங்களுடன் போடுவதில்லை?’ எனக் கேட்கிறார் செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர். அங்கே இருக்கும் திரையரங்குகள் மாதிரியா நீங்கள் திரையரங்குகள் கட்டியுள்ளீர்கள். மேலும் நான் உங்கள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும் நீங்கள் வசூலை சரியாக கொடுக்கப்போவதில்லை பின் எப்படி நான் உங்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்க முடியும் என கோவமாக விளக்கம் கேட்கிறார் தாணு. மேலும் ராமானுஜம் (திரையரங்க உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்) போன்ற மேதைகள் இருந்த இடத்தில் இப்படிப்பட்ட ரவுடிகள் வந்து அமர்ந்துள்ளனர் எனவும் கூறினார்.

இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறு கொந்தளித்த தாணு, மேலும் ‘தெறி படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே நாள் வசூலாக சென்னையில் மட்டும் ஒரு கோடியைச் சம்பாதித்துள்ளது. எந்தப் படத்திற்காவது இப்படி வசூல் வந்திருக்கிறதா நாங்கள் ஒன்றும் கொள்ளைக்காரர்களோ, கொலை காரர்களோ இல்லை’ என்றார். 

படம் : பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!