வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (20/04/2016)

கடைசி தொடர்பு:11:48 (20/04/2016)

மணிரத்னம் பட வாய்ப்பை மறுத்தேனா? சாய்பல்லவி விளக்கம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பும், போஸ்டரும் இதுதான் என இணையத்தில் போலி போஸ்டர் ஒன்று வைரல் ஆனது, அடுத்த செய்தியாக, சாய் பல்லவி மணிரத்னம் படத்திலிருந்து வெளியேறினார் என செய்திகள் பரவின.

இதனை ட்விட்டரில் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார் சாய் பல்லவி, ”என்னைப் பற்றிய வதந்திகள் நிறைய சுற்றலில் உள்ளன, அதற்கு பதிலளிக்க நினைக்கிறேன். யாருக்கும் மணிரத்னம் சார் படத்திலிருந்து வெளியேறும் அளவுக்கு இதயம் இருக்காது”. ”ஒரு லெஜெண்ட் இயக்குநராக கதாபாத்திரத்திற்கு யார் சரி, மேலும் என் மேல் அக்கறை உள்ளவராக எனக்கு எது சிறந்தது என அவருக்குத் தெரியும்”.

”இந்தக் கதையை குறித்து போதுமான அளவிற்கு என்னிடம் விளக்கினார். அவருக்கு இருக்கும் அந்தஸ்த்துக்கு அவர் விளக்க வேண்டிய அவசியமே இல்லை”. அவருடைய தீவிர ரசிகையாக நானும் இந்தப் படத்திற்காகக் காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

இதன்மூலம் இருவரும் கதை குறித்தும், பாத்திரம் குறித்தும் பேசி தீர்மானித்த பின்னரே அந்த பாத்திரத்திற்கு வேறு ஒருவர் தேர்வு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனினும் தற்போது மணிரத்னம் படத்தில் சாய் பல்லவி இல்லை என்பதே உண்மை. மேலும் படத்தில் அதிதி ராவோ புது நாயகியாக பேசி வருகிறார்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்