வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (20/04/2016)

கடைசி தொடர்பு:13:39 (20/04/2016)

'மிஸ் பண்ணிட்டீங்களே?!'- ‘சென்னை சிங்கம்ஸ் சூர்யா’ நெகிழ்ச்சிக் கடிதம்

நட்சத்திர கிரிக்கெட் பற்றிய தனது அனுபவங்களையும் கருத்துகளையும் ட்விட்டரில் ஒரு கடிதமாக வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில், 

                1954ல் நடிகர் சங்கத்துக்கான இடம் வாங்கப்பட்டது. நமக்கு வீடாக மாறிய அந்த இடத்தின் ஒவ்வொரு அறைகள், வளாகத்தில் நாம் பயின்றோம். இப்போது வெறும் இடமாக இருக்கிறது. மீண்டும் அதை முன்பு போல் வீடாக மாற்றும் பொறுப்பு நம்முடையதே. நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு இந்தக் கனவை நினைவாக்கும் பொருட்டே நடத்தப்பட்டது.

முதலில் இந்த நல்ல காரணத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்து ஆதரவுகளைக் குவித்த பார்வையாளர்களுக்கு நன்றி. நீங்கள் தான் எங்களை உந்தும் சக்தி. நம்புங்கள்... வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடிகர்கள் , மற்றும் இந்த நிகழ்வை பெரிய அளவில் மாற்றிய அனைத்து சினிமா சகோதரர்களுக்கும் நன்றிகள்.

சில சகோதரர்கள் படப்பிடிப்பு காரணமாக வரமுடியவில்லை. நீங்கள் உண்மையில் ஒரு முக்கிய நிகழ்வை தவறவிட்டுவிட்டீர்கள். சீனியர் , ஜூனியர் என்கிற வரிசைகள் இருப்பினும் நாங்கள் அனைவருமே குழந்தைகளாக மாறி பழைய நினைவுகளுக்குச் சென்றோம். நடிகர்கள், மீடியாக்கள், மக்கள் என அனைவரும் ஒரு நல்ல காரணத்துக்காக ஒன்றிணைந்தது உற்சாகமாக இருந்தது.

ஒரு விளையாட்டு வீரன் நல்ல நடிகனாக இருக்க அவசியமில்லை, ஒரு நடிகன் நல்ல விளையாட்டு வீரனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டக் அவுட்ஸ், தவறவிடப்பட்ட கேட்சுகள், வைடுகள், நோ பால்கள், சிக்ஸ், மற்றும் ஃபோர் என அனைத்தும்  இருந்தன.ஆனால் ஒற்றுமை, நல்ல எண்ணம், நெகிழ்ச்சி ஆகியன பிரதானமாக இருந்தது.

நல்ல எண்ணங்களுடன், விளையாடிய அனைத்து அணித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த எனர்ஜியான இளைஞர்கள் குழுவில் நானும் பங்கு வகித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஆதரவுகளுடனும், ஆசீர்வாதங்களுடனும் ஒரு பெரிய குடும்பமாக இன்னும் நிறைய உயரங்களை நாம் தொடலாம்.

நன்றிகள் மற்றும் அன்புடன்

சூர்யா

என அக்கடித்ததில் தனது மன நிறைவையும் , மகிழ்ச்சித் தருணங்களையும் பகிர்ந்துள்ளார் சூர்யா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்