நட்சத்திர கிரிக்கெட்டுக்கு ராதாரவி, சரத்குமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? நடந்தது என்ன!?

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எங்களை அழைக்கவில்லை. எனது கணவர் சரத்குமாரிடம் உங்களுக்கு அழைப்பு வந்ததா? என்று கேட்டேன். அவரும் அழைப்பு வரவில்லை என்று சொன்னார். அதுபோல் நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவியையும் அழைக்கவில்லை. அவர் மிகவும் வருத்தப்பட்டார். வாகை சந்திரசேகருக்கும் அழைப்பு வரவில்லை.

நாங்களும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக இதை விட அதிகமாகப் பாடுபட்டு இருக்கிறோம். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிகர் சங்கத்துக்காக நிதி திரட்டி இருக்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வெளி மாநில நடிகர்களையெல்லாம் அழைத்து இருக்கிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகர்-நடிகைகள் அழைக்கப்படவில்லை. இது வருத்தம் அளிக்கிறது என்று ராதிகா பேட்டி கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி நடிகர் சங்கம் தரப்பில் கேட்டபோது, சரத்குமார், ராதிகா, ராதாரவி, வாகைசந்திரசேகர் ஆகிய எல்லோருக்கும் எங்கள் அலுவலத்திலிருந்து ஒருவர் சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தார். எங்களுக்கு விஐபி பாஸ் கிடைக்க தாமதமானது, அது கிடைத்ததும் இரவு ஒன்பது மணியளவில் ராதிகா அலுவலகத்திலும் அதற்கடுத்து ராதாரவி வீட்டிலும் கொடுக்கப்பட்டுவிட்டது.

இவர்களில் வாகைசந்திரசேகர், பாலவாக்கம் தாண்டியிருப்பதால் இரவு பத்து மணியளவில் போனபோது அவரைப் பார்க்க முடியவில்லை. எனவே அடுத்தநாள் காலையில் அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அவரோ, நான் தேர்தல் பணிகளில் இருப்பதால் என்னால் நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று சொல்லிவிட்டார் இதுதான் உண்மை என்று சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!