வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (20/04/2016)

கடைசி தொடர்பு:16:49 (20/04/2016)

ஆண் பிள்ளை பெற்றவர்களே இந்த வீடியோவைப் பார்த்தீர்களா? வைரலாகும் ஐஐடி மாணவிகளின் வீடியோ!

ஐஐடி மாணவிகள் இணைந்து ஒரு வீடியோ எடுத்துள்ளார்கள். வீட்டில் பார்த்து திருமணம் செய்துகொள்வதை அடிப்படையாகக் கொண்டும், மேலும் மாப்பிள்ளை வீட்டார் எப்படியெல்லாம் பெண் தேடுகிறார்கள்  என்பதை சற்றே கிண்டலடிக்கிறது அந்த வீடியோ!

 தன் மகனுக்கு பெண் தேடினால் எப்படித் தேடுவார்கள் என்பதை ஒரு ஆங்கிலப் பாடலாகப் பாடி , மாமியாருக்கே உரிய மிடுக்கு , தோரணை என பட்டையைக் கிளப்புகிறார் கிருபா வர்கிஸ். பாடலுக்கு வரிகள், குரல்கள் கொடுத்துள்ளார்கள் அஸ்மிதா கோஷ் மற்றும் அனுகிருபா இளங்கோ.

பாடலின் தமிழாக்கம் பின்வருமாறு...

  ”ரொம்ப காலமா இதுக்கு நான் காத்திருந்தேன், என் பையனுக்கு ஒரு பொண்ணு தேவைப்படுது,

அவன் மனைவியானா நீங்க என்னவெல்லாம் எடுத்துக்கலாம் தெரியுமா? பணக்கார குடும்பம், சொந்தமா ரெண்டு மெர்சிடிஸ் பென்ஸ் கார், நாகரிகமான சமையலறை இதெல்லாம் அவனோட பொண்டாட்டிக்காகத்தான்.

எம்.பி.ஏ ஹேண்ட்சம், கூட்டுக் குடும்பம், அம்மா செல்லம், பெண்களைப் பைத்தியமாக்கும் ஆறடி உயரம், ஷூ சைஸ் 10, ஹேய்! உயரமான, ஒல்லியான, அழகான பெண்ணே , நாங்கள் மணமகள் தேடுகிறோம், இதுதான் எங்கள் மொபைல் எண்,

உங்கள் போட்டோக்களை அனுப்புங்கள், நேரமில்லை, நீங்க குழந்தைகள்லாம் பெறணும், மறக்காம கால் பண்ணுங்க, உங்க வட்டமான சப்பாத்தி சேம்பிள்களையும் சப்மிட் பண்ணுங்க என்றெல்லாம் சொல்லிமாப்பிள்ளை வீட்டாரை  வாரியுள்ளார்கள் மாணவிகள்..

வீடியோவைக் காண:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்