செல்வராகவன் படத்திலிருந்து சந்தோஷ்நாராயணன் நீக்கம், ரஜினியின் கபாலி காரணமா? | Yuvan replaces Santhosh Narayanan in Nenjam Marapadhillai

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (21/04/2016)

கடைசி தொடர்பு:11:47 (21/04/2016)

செல்வராகவன் படத்திலிருந்து சந்தோஷ்நாராயணன் நீக்கம், ரஜினியின் கபாலி காரணமா?

 

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் நந்திதா உட்பட பலர் நடிக்கும்  "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப்படத்துக்கு இசையமைக்க முதலில் சந்தோஷ்நாராயணனை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இப்போது படப்பிடிப்பு நிறைவடையும் நேரத்தில் அவரை மாற்றிவிட்டு யுவன்ஷங்கர்ராஜாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ஏன் இந்த அதிரடி மாற்றம்? என்று விசாரித்தால், சந்தோஷ்நாராயணன் கைவசம் நிறையப்படங்கள் இருக்கின்றனவாம். அதனால் செல்வராகவனின் தேவைக்கேற்ப அவரால் பணியாற்ற முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ரஜினியின் கபாலி படவேலைகளில் சந்தோஷ்நாராயணன் தீவிரமாக இருக்கிறாராம். அதனால் செல்வராகவன் படத்துக்காக அவரால் நேரம் ஒதுக்கமுடியவில்லையாம்.

எனவே வெற்றிக்கூட்டணியான யுவனையே இசையமைக்க வைத்துவிடலாம் என்று செல்வராகவன் முடிவெடுத்தாராம். யுவனும் ஒப்புக்கொண்டாராம்.

ஏற்கெனவே காதல்கொண்டேன், 7ஜிரெயின்போகாலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நல்ல வரவேற்புப் பெற்ற வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்துவிட்டது. இந்தக் கூட்டணிக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்