ஸ்ருதிக்கு நான் அறிவுரை கூறினேனா? சர்ச்சைக்கு விளக்கமளித்த கமல்

விக்ரம்பிரபு, புதுமுகம் ரன்யாராவ் ஆகியோர் நடிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாகா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டுப் கமல் பேசிய போது, ”சிவாஜியை விட பணிவான ஒரு நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. அதே போல் தான் அவர் வீட்டிலிருந்து வந்த விக்ரம் பிரபுவிடமும் அவ்வளவு பணிவு” என்றார் கமல்.

இந்நிலையில் சில ரசிகர்கள், "விக்ரம் பிரபுவை பாராட்டி மறைமுகமாக ஸ்ருதி ஹாசனுக்கு அறிவுரை கூறினீர்களா எனக் கேட்க அதற்கு கமல் ஹாசன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதில், நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கவே வார்த்தைகள் விளக்கப்பட்டன.  விக்ரம் பிரபுவை பணிவானவர் எனக் கூறி மறைமுகமாக ஸ்ருதிக்கு நான் அறிவுரை கூற வேண்டியதில்லை".

"நானும் ஸ்ருதியும் எப்போதும் புதிய விஷயங்களை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் திறந்த மனதாகவே இருப்போம். இதே வயதில் என்னை நான் ஒப்பிட்டால் ஸ்ருதி மிகவும் பணிவானவர்" என கமல் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதற்கு ஸ்ருதி ஹாசனும், "எல்லாவற்றையும் உங்களிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன் அப்பா... நீங்கள் தான் மிகச்சிறந்தவர்” என பதில் ட்வீட் அளித்துள்ளார். இவர்கள் இருவரின் இந்த ட்வீட்டுகளால் ரசிகர்கள் உற்சாகமாகி பல பதில்களை போட வைரலாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!