இது நம் சங்கம், வெளியே போக வேண்டாம்! சிம்புவுக்கு குவியும் அறிவுரை

நடிகர் சங்கம் தனக்கு சிக்கல் வந்த வேளையில் எந்த உதவியும் செய்யவில்லை, அதனால் நடிகர்சங்கத்தை விட்டு விலகுகிறேன் என சிம்பு அறிவித்திருந்தார்.மேலும் நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.பெரும்பாலான நடிகர்கள் அதில் ஜோக்கர்களாகவே தெரிந்தனர். எனக் கூற இந்தச் செய்தி தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிம்பு இப்படி ஒரு முடிவெடுத்திருந்தால் கண்டிப்பாக நடிகர் சங்கம் அவரது பிரச்னைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு ஆலோசிப்போம். என நடிகர் சங்கத் தலைவர் நாசர் நமது சினிமா விகடனுக்குப் பிரத்யேகமாகக் கொடுத்த பேட்டியிலும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ராதிகா ட்விட்டரில் சிம்புவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

அதில், “ இது சீனியர் நடிகராக எனது அறிவுரை..நடிகர் சங்கத்தை விட்டு வெளியேற வேண்டாம்.. என் தந்தை, குடும்பத்தார், மற்றும் உங்கள் தந்தை என அனைவரின் விலைமதிப்பில்லா பங்களிப்பும் இந்த சங்கத்தில் இருக்கிறது. உள்ளிருந்து போராடுங்கள்”.. “இது அவர்கள் சொத்தல்ல, இது நமது சங்கம்... அவர்கள் உங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள்.. ஆனால் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். பரீசிலனை செய்யுங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள் சிம்பு” எனக் கூறியுள்ளார் ராதிகா”.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!