தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு? | Sasikumar's Vetrivel Movie in risk by Vijay's Theri?

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (21/04/2016)

கடைசி தொடர்பு:17:17 (21/04/2016)

தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?

 

அதிகவிலை மற்றும் மினிமம்கியாரண்டி அடிப்படையில்தான் படம் தருவோம் என்று தயாரிப்பாளர் தாணு சொன்னதால், விஜய்யின் தெறி படத்தை செங்கல்பட்டு பகுதி திரையரங்கஉரிமையாளர்கள் திரையிடவில்லை.

இதனால் விஜய் படம் முதன்முறையாக தமிழகத்தின் ஒரு பகுதியில் வெளியாகாமல் போனது. இந்தச்சிக்கல் அதோடு முடியாமல் இன்னும் தொடருகிறது.

தயாரிப்பாளர்கள்சங்கத்தில் தெறி படத்தைத் திரையிடாத திரையரங்குகளுக்கு வேறு எந்தப் புதுப்படத்தையும் திரையிடத் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் நாளை வெளியாக இருக்கும் சசிகுமாரின் வெற்றிவேல் படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தின் தமிழக விநியோக உரிமையை லைகா நிறுவனம் வாங்கியிருந்தது.

இப்போது இந்தச் சிக்கல் வந்துவிட்டதால் செங்கல்பட்டு தவிர மற்ற பகுதிகளில் லைகா வெளியிடுகிறதாம். சிக்கலுக்குள்ளான செங்கல்பட்டு பகுதி விநியோக உரிமையை தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாம்.

இதனால், இந்தப்படமும் செங்கல்பட்டு பகுதியில் வெளியாகாமல் போகும் வாய்ப்பு உள்ளதாகப் பேச்சு வந்துகொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக படத்தின் தாயரிப்பாளர் ரவீந்திரனிடம் கேட்டபோது, இந்தச்சிக்கல் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம், முடிவு எடுத்ததும் சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்