படங்கள் ஏன் ஓடுவதில்லை? - கவுண்டமணி சொல்லும் அட்றா சக்க ரகசியம்! | goundamani speech at Enakku Veru engum kilaigal kidayadu audio function

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (22/04/2016)

கடைசி தொடர்பு:11:07 (22/04/2016)

படங்கள் ஏன் ஓடுவதில்லை? - கவுண்டமணி சொல்லும் அட்றா சக்க ரகசியம்!

விஜய் சேதுபதி, ஆரி, டைரக்டர்கள் பேரரசு, சுசீந்திரன், சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்ட ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அதில் பேசிய கவுண்டமணி, ’கட்டுப்பாடுகள் இல்லாததால் சினிமாவின் நிலைமை ஆரோக்கியமில்லாததாக இருக்கிறது. கட்டுப்பாடுகள் இருந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். ஒரே ஒரு காட்சிதான் பல திரையரங்குகளில் ஓடுகிறது திடீரென்று அதையும் நிறுத்தி விடுகிறார்கள்’ என்றார். மேலும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் நகைச்சுவை, அரசியல், செண்டிமெண்ட் என்று எல்லாம் உண்டு. கலப்புத்திருமணம் செய்து கொள்ளும் காதலர்களை சேர்த்து வைக்கிற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இப்பல்லாம் என்னடான்னா, சினிமா படங்கள் ஓடுவது இல்லை. வசூல் இல்லை என்று சங்கப்பட்டுக் கொள்கிறார்கள். அதுக்கு பல காரணம் உண்டு. படம் பார்க்கிற ரசிகர்களை விட, நடிக்கிறவங்கதான் அதிகமாகிட்டாங்க. அதுனால படங்கள் நிறைய வருகிறது. அத்தனை படங்களுக்கும் தியேட்டர்களும் கிடைப்பதில்லை. இதனால்தான் படங்கள் ஓடுவதில்லை’ என்றார்.

இதைச் சொன்னதும் பலருக்கும் அவரது ‘புண்ணாக்கு விக்கறவன் குண்டூசி விக்கறவன்லாம் தொழிலதிபராம்’ என்கிற அவரது பிரபலமான வசனம்தான் மனதுக்குள் வந்துபோனது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்