விஜய் படங்களைத் தொடர்ந்து அஜித் படங்கள்! ரீமேக் செக் | Pawan Kalyan to act in Ajith's Veeram,. Vedhalam Telugu remake

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (22/04/2016)

கடைசி தொடர்பு:12:08 (22/04/2016)

விஜய் படங்களைத் தொடர்ந்து அஜித் படங்கள்! ரீமேக் செக்

சமீபகாலமாகவே ஒவ்வொரு மொழி சினிமாவிலும் மற்ற மொழி சினிமாக்களை ரீமேக் செய்யும் பாரம்பரியம் தலைவிரித்து ஆடத்துவங்கியுள்ளது. தமிழில் படையெடுக்கும் மலையாள ரீமேக்குகள் என்றால் தெலுங்கிலும், இந்தியிலும் தமிழ் ரீமேக்குகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. விஜய்யின் கத்தி, தெலுங்கில் சிரஞ்சீவியும், இந்தியில் அக்‌ஷய் குமாரும் நடிக்க ரீமேக்காகி வருகிறது.

அடுத்தக் கட்டமாக பவன் கல்யாண் தமிழில் இரண்டு முக்கிய இயக்குநர்களையும், இரண்டு முக்கியப் படங்களையும் தேர்வு செய்துள்ளார். தெலுங்கைப் பொருத்தமட்டில் பவன் கல்யாண் மட்டுமே இன்னமும் தமிழுக்குள் கால் பதிக்காமல் இருக்கிறார். தற்போது இவர் தேர்வு செய்திருக்கும் படங்களும், இயக்குநர்களுமே ரசிகர்கள் மத்தியில் பவன் கல்யாணை பிரபலமாக்கிவிடும் எனலாம்.

எஸ்.ஜே.சூர்யா, மற்றும் பா.ரஞ்சித் என இருவரும் அடுத்தடுத்து பவன் கல்யாண் படங்களை இயக்க இருக்கிறார்கள். இரண்டுமே அஜித்தின் வசூல் படங்களான வீரம் மற்றும் , வேதாளம். அனேகமாக அடுத்து தமிழில் பவன் கல்யாண், தெலுங்கில் அஜித் என கால் பதிக்க வைப்பார்கள் என்றே தெரிகிறது. பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்