கபாலி ரிலீஸில் சிக்கல் உண்டாகுமா? இந்த வார ஃப்ளாஷ்பேக் #WeeklyViral | This Week Cinema & Tv viral news

வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (23/04/2016)

கடைசி தொடர்பு:16:40 (29/04/2016)

கபாலி ரிலீஸில் சிக்கல் உண்டாகுமா? இந்த வார ஃப்ளாஷ்பேக் #WeeklyViral

கடகடவென கரைந்து விட்டது ஒரு வாரம் ... இந்த வாரம் நடிகர் சங்கம் தான் ஸ்பெஷல் வைரல்...

வாரத்தின் முதல் நாளே நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட் கலாட்டா. சூர்யா, ஆர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, ஜீவா, சிவகார்த்திகேயன் என கேப்டன்கள் அவதாரம் எடுக்க சேப்பாக்கம் களைகட்டியது... நாள் முழுக்க ரிமோட்டுக்கு வேலையே இல்லை!

 கலர்ஃபுல்லாக மின்னிய சேப்பாக்கம்! நட்சத்திரகிரிக்கெட் முழுமையான ஆல்பத்திற்கு க்ளிக்கவும்!

அடடே இவர்கள் இருவரின் நட்பைப் பாருங்களேன். என அனைவரையும் வியக்க வைத்தார்கள் ரஜினி , கமல்.. இருவரும் தங்களது ஜூனியர் நடிகர்கள் விளையாட டாஸ், போட்டு வாழ்த்துச் சொல்லி ஒரே சோபாவில் அமர்ந்து ரசிக்க ரசிகர்கள் குஷி அண்ணாச்சியானார்கள்..

விளையாட்டை முடித்த கையோடு சூர்யா வராத நடிகர்களை “ மிஸ் பண்ணீட்டீங்களே என நெகிழ்ச்சியாக நன்றிக் கடிதம் எழுத. ட்விட்டர், சமூக வலைதளங்கள் என பிஸியானது.. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!

சூர்யாவின் முழுமையான கடிதத்திற்கு க்ளிக்கவும்! 

அறிக்கைவிட்டார் சிம்பு... எனக்குச் சிக்கல் வந்த வேளையில் நடிகர் சங்கம் என்னைக் கண்டுகொள்ளவில்லை. சங்கத்தை விட்டு வெளியேறுகிறேன் என்றார். மேலும் நடிகர்கள் பலரும் நட்சத்திர கிரிக்கெட்டில் ஜோக்கர்களாக தெரிந்தார்கள் எனக் கூற அவ்வளவு தான் பற்றிக்கொண்டது சினிமா உலகம்.. சும்மாவே இருக்க மாட்டிங்க சார் நீங்க!

 

நடிகர்கள் ஜோக்கர்களாக தெரிந்தார்கள்... நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் #சிம்பு அதிரடி

சார் சார் இதுக்கு உங்க பதிலென்ன என சிம்பு குறித்து தலைவர் நாசரிடம் மைக்கை நீட்டினோம்... கண்டிப்பாக அவரது பிரச்னையை கேட்டறிந்து ஆலோசனை கொடுப்போம், அவரை முடிந்தவரை வெளியேற விடமாட்டோம் என்றார்.. அனுபவம் பேசுகின்றதே!

நாசர் பேட்டிக்குக் க்ளிக்கவும்!

இனிமே பொண்ணு தேடுவீங்களா என ஆண் பிள்ளைகள் பெற்ற சில மேல்தட்டு வாசிகளின் கபாலத்தில் கணீரென அடித்தது ஐஐடி மாணவிகளின் அலப்பறை வீடியோ... அரேஞ்ச்ட் மேரேஜ் மற்றும் அதில் பெண்களை மாப்பிள்ளை வீட்டார் தேடும் விதத்தையும் சும்மா கலாய்த்து தள்ளிவிட்டார்கள் குறும்பு கேர்ள்ஸ்... சூப்பரப்பு!

இறைவி, ஜோக்கர், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது , மனிதன், அப்பா, இந்தியில் வெயிட்டிங் படங்களின் டிரெய்லர்களும், விக்ரமின் இருமுகன், மீண்டும் ஒரு காதல் கதை படங்களின் டீஸர்களும் இந்த வார சினிமா  சார்ட்டை அலங்கரித்துள்ளன.

விக்ரமின் இருமுகன் டீஸருக்கு! க்ளிக்கவும்

என்னது நான் பார்ட்டியில் அஜித் பாடலை நிறுத்தச் சொன்னேனா, ஏன் இப்படியெல்லாம் வதந்தி பரப்புறீங்க என்றவர், அடுத்த ட்வீட்டில் இந்திய வரலற்றில் முதன்முறையாக நடிகர் சங்கக் கடன் அடைப்பு என , சவுண்டு கொடுத்தார் விஷால்.. நானும் மதுரக் காரன் தான்டா!
 

தெறி படத்தை வெளியிட விடாமல் செங்கல்பட்டு பன்னீர்செல்வம் பஞ்சாயத்து செய்கிறார் என கலைப்புலி தாணு பிரஸ் மீட் கொடுக்க, படம் வெளியாகாததுக்குக் காரணம் தாணுவின் அடாவடியே என விநியோகஸ்தர்கள்  அடுத்து மைக்கைப் பிடிக்க இப்போது கபாலி ரிலீஸ் கலங்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது... அட சண்டை போடாதிங்க ஏட்டையா!

சிம்பு வெளியேறுகிறேன் என சொன்னது தான் தாமதம் ராதிகா, சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் ஆகியோர் இது நம் சங்கம், நம்ம உழைப்பு ...இது நம் உரிமை போகாதே என அட்வைஸ்கள் குவிந்து வருகின்றன... இதுக்கு இன்னொரு பீப் பாட்டே பாடியிருக்கலாம் மொமெண்ட்!

சிம்பு எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்? விஷாலிடம் கேட்கிறார் டி.ராஜேந்தர் 

விக்ரம் பிரபுவை சொல்வது போல் என் மகளுக்கு மறைமுக அறிவுரை கொடுக்க வேண்டிய தேவையில்லை. ஸ்ருதி என்னை விட பணிவானவர் என கமல் ஹாசன், மற்றும் ஸ்ருதி மாறி மாறி டாடி டாடி ஓ மை டாடி பாட்டுப் பாடாத குறையாக  ட்விட்ட ரசிகர்கள் செம குஷி..

இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் 2... அதே வடிவேலு, சிம்புதேவன் கூட்டணி மற்றும் விஷாலின் அடுத்த படம் என வடிவேலு செம பிஸியாகிவிட்டார்... அடிக்கிற அடியில் தாரைதப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டும்!

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் நாள் கணக்கில் சம்பளம் வாங்கி நடித்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கடைசி நாள் படப்பிடிப்பில் நான் மொத்தமே மூன்று மணிநேரம் தான் நடித்தேன் மீதி பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என படக்குழுவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்...அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவரே!

தமிழ் நாட்டுக்கு ரஜினியைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன் தெறியில் வில்லனாக அறிமுகமானார். கமல் மட்டும் இல்லையெனில் ’முள்ளும் மலரும்’ படம் வெளியாகியிருக்காது என வாகா இசை வெளியீட்டு விழாவில் கூற கமல் ரசிகர்கள் யாரென்று தெரிகிறதா? எனக் கெத்து காட்டினார்கள்!

மகேந்திரன் மேலும் என்ன சொன்னார் தெரிந்துகொள்ள க்ளிக்குங்க! 

இவ்வளவும் எதுக்கு... அந்தா படம் ரிலீஸ் ஆயிடுச்சே வெற்றிவேல்... இந்தப் படத்திற்கு நாடோடிகள் பார்ட் 2 என வைத்திருக்கலாம் என கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த வாரம் அம்புட்டுதான்! 

வெற்றிவேல் விமர்சனத்திற்கு க்ளிக்கவும்

- ஷாலினி நியூட்டன் -

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்