அதிமுகவில் சேர்ந்தார் நமீதா! (படங்கள்)

எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வாழவைக்கிறது தமிழ்நாடு. சென்னை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நம்மை வாழவைக்கிற ஊருக்கு, நானும் ஏதாவது செய்யணும் இல்லையா? இப்போ மன்றங்கள் மூலமா, என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்துட்டு இருக்கேன். எதிர்காலம் எனக்காக என்ன வெச்சிருக்கோ, அதை அப்புறம் பார்த்துக்கலாம்!’என்று 2007 இல் பேட்டி கொடுத்திருந்தார் நமீதா
2014 இல், இந்த ஆண்டு 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். ஒன்று பெரிய படம், மற்றொன்று சண்டை படம். படத்தின் பெயர்கள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படுகிறது.
 
அரசியலுக்கு வர நான் திட்டமிட்டுள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் இறங்குவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை குறித்து பின்னர் அறிவிப்பேன் என்று சொல்லியிருந்தார்.
 
கடந்த மார்ச் இறுதியில் அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கட்சியில் சேர அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார். அதில், 'நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன்.தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது.

சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன்.தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று,  இந்நிலையில், சனிக்கிழமை மாலை திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
 
இதில் நடிகை நமீதாவும் கலந்துகொண்டு, முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!