வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (23/04/2016)

கடைசி தொடர்பு:20:46 (23/04/2016)

தனுஷுக்கு ஒரு ஜிகர்தண்டா பார்சல்..! #Exclusive

இந்த வருடம் தனுஷ் கையில் மட்டும் மொத்தம் ஐந்து படங்களுடன் செம பிஸியாக இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி, கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கிப் பாயும் தோட்டா, ஆங்கிலத்தில் தி ஃபாகிர் என படங்கள் லிஸ்ட் நீள்கின்றன.

இந்நிலையில் திடீரென ”எனது அடுத்தப் படத்தின் இயக்குநர் குறித்து சரியாக எட்டு மணிக்கு அறிவிக்கப் போகிறேன். எங்கே கெஸ் பண்ணுங்கள்” என ட்விட்டரில் போட ஓடி வந்து சீக்ரெட்டை உடைத்தார் நடிகர் கருணாகரன். ஆம் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார்.

இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் எனவும், மற்றும் கருணாகரன் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் மற்ற நடிகர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கும் என தனுஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்