சென்னைவாசிகளுக்கு விசில் போடுகிறார் விக்ரம்! | Vikram Says About Sprit Of Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (25/04/2016)

கடைசி தொடர்பு:13:01 (25/04/2016)

சென்னைவாசிகளுக்கு விசில் போடுகிறார் விக்ரம்!

கடந்த டிசம்பர் மாதம் பெரும் மழைவெள்ளம் சென்னையையும் அதைச்சுற்றியுள்ள இடங்களையும் துவம்சம் செய்தது. அந்த நேரத்தில்  அரசியல் தலைவர்கள், நடிக நடிகைகளைத் தாண்டி, வெகுஜன மக்கள் வீதிகளில் இறங்கி பாதிக்கப்பட மக்களுக்கு உதவிகளைச் செய்தனர். இந்த மனிதநேயத்தை மையப்படுத்தி விக்ரம் உருவாக்கியிருக்கும் பாடல் தான் “ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை”.

இந்தப் பாடலில் சூர்யா, நயன்தாரா, அபிஷேக் பச்சன், நிவின்பாலி, கார்த்தி, பிரபுதேவா உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர். அந்த வீடியோ இன்று இணையத்தில் வெளியாகவிருக்கிறது.

மக்களின் மனிதநேயம் பற்றி விக்ரம் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையைச் சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு,குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை.

சில இடங்களில் உயிரைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த மழை.  இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள். வெள்ளத்தினைத் தாண்டி,உலகில் இருக்கும் அத்தனை பேரின்  கவனத்தினை ஈர்த்தது.

வெள்ளத்திற்கு எதிராக இறங்கி,என் நகரத்தினை  மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள்.
சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது.

உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த
இயற்கைப் பேரிடர் தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.

எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய,அந்த  ஆயிரக்கணக்கான நல்உள்ளங்களை  என் கேள்விக்கு பதிலாக, நான் பார்த்தேன். மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது. என்னை நான் இன்னும்சற்று மெருகேற்றிக் கொள்ளக் காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று விக்ரம் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்