வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (25/04/2016)

கடைசி தொடர்பு:14:35 (25/04/2016)

ரஜினியாக இருங்கள், கமலாக இருக்காதீர்கள்... ராம் கோபால் வர்மா அடுத்த சர்ச்சை!

ஷாருக்கான் கமல் ஹாசனைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என ராம் கோபால் வர்மா புது சர்ச்சையை உருவாக்கியுள்ளார். கடந்த வாரம் ரஜினி, சிரஞ்சீவி என கருத்து சொல்லி ரசிகர்களின் கண்டனத்தை வாங்கிக்கொண்ட ராம் கோபால் வர்மா இந்த வாரம் கமல், ஷாருக்கின் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார்.

அவரது கருத்துகள் பின்வருமாறு, ‘ மாபெரும் நடிகர் ஷாருக்கான் சாதரண ரசிகராக மாறியுள்ளார். குள்ள மனிதன் , மற்றும் இன்னும் ஏராளமான தவறுகளை கமல் செய்தது போல் இப்போது ஷாருக் செய்யத் துவங்கியுள்ளார், எப்படி கமல் ஹாசன் தனது நட்சத்திர அந்தஸ்த்தை ரஜினிகாந்திடம் விட்டாரோ அது போல் ஷாருக்கான் சல்மானுக்கு செய்துகொண்டிருக்கிறார். குள்ளமாக, உயரமாக, குண்டாக என மாறாமல் இருந்தவரை ரஜினிகாந்த் போல் கமலும் சூப்பர் ஸ்டாராகவே இருந்தார். ஒரு ரசிகனாக ஷாருக்கான் கண்டிப்பாக தவறான ஆலோசனைகளைக் கேட்க மாட்டார் என நம்புகிறேன்.

ஏராளமான நடிகர்கள் நடிப்புப் பள்ளிக்கூடங்கள், மேடைகள் என டஜன் கணக்கில் வருகிறார்கள். ஷாருக்கானும் அப்படித்தான் கடவுளின் அருளால் வந்திருக்கிறார். அதை இப்போது ஷாருக் உணரவில்லை. இப்படித்தான் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் 30 வருடங்கள் சூப்பர் ஸ்டாராக இருந்துவிட்டு, பின்னர் க்ரிட்டிக்ஸ் ஹீரோவாக மாறினார். ஷாருக்கானுக்கு இந்த நிலை வரக் கூடாது என நான் கடவுளை வேண்டுகிறேன் . ஷாருக்கான் கமலின் தவறுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும், மேலும் மெகா ரஜினிகாந்தாக ஷாருக்கான் வருவதை தடுத்துக்கொண்டிருக்கும் அன்புக்குரிய நண்பர்களின் பேச்சைக் கேளாமல் தள்ளி இருக்க வேண்டும்.

”நான் ஷாருக்கை மெகாஸ்டார் என்றே அழைப்பேன். சல்மான் கான் போல் உடலில் தசைகள் இல்லை, அமீர்கான் போல் கடின உழைப்பு இல்லை எனினும் ஷாருக், ஷாருக்காக இருப்பதாலேயே அவர், சல்மான், அமீரை விட உயர்ந்தவராக இருக்கிறார். ரஜினிகாந்த் ரஜினிகாந்தாகாவே இருக்கிறார், கமல் எப்போதும் யாரோ ஒருவராக இருக்கவே முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அந்தத் தவறை ஷாருக்கான் செய்யமாட்டார் என நம்புகிறேன்.மேலும் சல்மான் கான் சல்மானாகவே இருக்கிறார். அதனால் தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

வேறு ஒருவராக இருக்க முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் கமல் சிறந்த ரஜினிகாந்தாக இருந்திருப்பார். சல்மான்கான் போல் அதீத ரசிகர்கள் சூழ இருக்க வேண்டும் ஷாருக்கான்.கமல் செய்த தவறுகளை செய்யாமல் நட்சத்திர அந்தஸ்த்தை வரும் காலங்களில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஷாருக்கானை புகழ்வதாகவும் ஆறிவுரைக் கூறுவதாகவும் எண்ணி கமலைக் குறை சொல்லியுள்ளார் ராம் கோபால் வர்மா. இதனால் கமல்ஹாசனின் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவிற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்