ரசிகர்கள் மனம்கவர்ந்த ஹீரோ இவர்தான்..! - சினிமா விகடன் சர்வே | Who's most desirable man - Cinema Vikatan Survey result

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (25/04/2016)

கடைசி தொடர்பு:17:42 (25/04/2016)

ரசிகர்கள் மனம்கவர்ந்த ஹீரோ இவர்தான்..! - சினிமா விகடன் சர்வே

மக்களுக்கு விருப்பமான நடிகர் யார்னு ஒரு பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தி இவர்தான்’ன்னு அறிவிக்க அவர் தான் ஃபர்ஸ்ட் வந்தார் இவர்தான்னு எப்டி சொல்லலாம்?ன்னு ஒருத்தர் கேட்க பரபரப்பா இருக்கு இணையம்.

உண்மையில் யார் தான் வெற்றியாளர்  என விஜய், அஜித், சூர்யா, தனுஷ் நால்வருக்குமிடையே கடந்த சனிக்கிழமை மாலை முதல் சினிமா விகடனில் சர்வே நடத்தினோம்.. அதன் படி வெற்றியாளராக 51 சதவீத வாக்குகளுடன் விஜய் முதலிடமும், 35 சதவீதத்துடன் அஜித் இரண்டாம் இடமும், சூர்யா , தனுஷ் முறையே 10 மற்றும் 4 சதவீதத்துடன் மூன்றாம், நான்காம் இடம் பிடித்துள்ளனர். அதன் விபரங்கள் பின்வருமாறு. மேலும் உடனுக்குடன் வாக்களித்து ரிசல்ட்டும் அங்கேயே தெரியும்படி செய்திருந்தோம். 

இந்நிலையில் ஆரம்பித்த சில மணிநேரங்கள் அஜித்தும், பின்னர் விஜய்யும் என மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு நாள் இடைவேளையில் தற்போது விஜய் வெற்றி பெற்றுள்ளார். நமக்குத் தெரிந்து இப்போதைக்கு இப்படி போட்டி நடத்தினால் ஒன்று விஜய் அல்லது அஜித் இருவர் மட்டுமே முதலிடம் வகிப்பார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையே. அதன்படி இப்போது விஜய் முதலிடத்தில் இருக்கிறார். 

வாக்குகளின் நிலவரங்கள்

மொத்தம் 15, 836 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 

விஜய் 8080

அஜித் 5492

 சூர்யா 1582

தனுஷ் 681

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்