அனிருத் ஏன் ஹோலோ அமிகோ சொல்கிறார்?

இசை அமைப்பாளர் அனிருத் , இசைக்கு உகந்த வார்த்தை எந்த மொழியில் இருந்தாலும் அந்த வார்த்தையை இசை மொழிக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமுடையவர். க்யூபா நாட்டில்  ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது கூறும்  வார்த்தைதான் 'ஹோலா அமிகோ' என்பது.

அந்தச் சொல்லை தமிழ்ப்படத்துக்கான பாடலொன்றில் பயன்படுத்தியிருக்கிறார். சாய்பரத் இயக்கத்தில், ஹிரிஷிகேஷ், சஞ்சிதா நடித்துள்ள 'ரம்' படத்துக்காக அனிருத் இசை அமைத்து உள்ள பாடல் ஒன்று ' ஹோலா அமிகோ' என்ற  குறிப்பிடத் தக்கது. இந்தப்பாடல்  வெளிவந்த சில வினாடிகளிலேயே இணையதளத்தை குலுக்கி விட்டது எனக் கூறப்படுகிறது.
 
தமிழ்ப்படப் பாடலில் இதைப் பயன்படுத்தக் காரணம் என்ன என்பது பற்றி அனிருத் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் , ' நான் க்யூபாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் போது 'ஹோலா' என்ற இந்த வார்த்தையை தெருக்களில் மக்கள் சகஜமாக உபயோகிப்பதைக் கண்டேன். அந்த வார்த்தையின் அர்த்தமும் , அது கொடுக்கும் உற்சாகமும் அந்த வார்த்தையை என் பாடலில் உபயோகிக்க வைத்தது.' என்கிறார் அனிருத். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!