கவிஞர் காளிதாசனின் சிகிச்சைக்கு உதவிய விஷால்! | Vishal helps to Poet Kalidasan for his treatment

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (26/04/2016)

கடைசி தொடர்பு:11:31 (26/04/2016)

கவிஞர் காளிதாசனின் சிகிச்சைக்கு உதவிய விஷால்!

நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் காளிதாசனின் மருத்துவ சிகிச்சைக்கு விஷால் உதவியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி திருப்பத்தூரை சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன் வயது-68 இவர் தாலாட்டு என்ற படத்தின் முலம் பாடலாசிரியராக அறிமுகமானார் அவர் தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதினார் அதில் 1990-ல் நடிகர் பிரசாந்த் நடித்து, இசையமைப்பாளர் தேவா அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா என்ற பாடல், ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தில் தலை மகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே என்ற பாடல்கள் பிரபலமானது தொடர்ச்சியாக இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் இவர் எழுதிய பாடல்கள் பிரபலம் ஆகின இவ்வாறு நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி,சிறுகனூர் அருகில் உள்ள SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏழ்மையின் காரணமாக மருத்துவச் செலவிற்கு கஷ்டப்படுவதை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் உடனடியாக அவர் இயக்கி வரும் தேவி அறக்கட்டளை மூலம் கவிஞர் காளிதாசன் அவர்களின் மருத்துவச் செலவிற்கு ரூபாய் 25000/- அவருடைய மனைவி திலகவதியிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். 

இதே போல் முன்பு கொல்லங்குடி கருப்பாயி, மற்றும் பாடகி சரளா வறுமையில் வாடியதை அறிந்து விஷால் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்