அட ஆர்யாவா இது? அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

சைக்ளிங், ஜிம் என்று எப்போதுமே உடல் மீது அதீத காதலுடன் பராமரிப்பதுமே ஆர்யாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட் என்பது அனைவரும் அறிந்ததே. அடுத்தபடத்திற்காக அடுத்த லெவல் உடற்பயிற்சியை மேற்கொண்டுவருகிறார் லவ்வர் பாய் ஆர்யா.

மஞ்சப்பை இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படத்திற்காக 88 கிலோ வரைக்கும் உடல் எடையையும், உடலமைப்பையும் மாற்றி, பார்ப்பவர்களை அதிரவைக்கிறார் ஆர்யா.  ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டால், “ அடுத்த படத்தில் பழங்குடியினராக நடித்துவருகிறேன், அதற்காகத் தான் 6 மாத உடற்பயிற்சிசெய்து உடலமைப்பை மாற்றியிருக்கிறேன், இவ்வாறு உடலமைப்பை மாற்றுவது எனக்கு பிடிக்கும்” என்று  நம்மை வெடவெடக்க வைக்கிறார். 

தற்பொழுது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ ஃபிட்னெஸ் பிரியர்கள் மத்தியில் செம வைரலடித்துவருகிறது. அந்த வீடியோ இதோ,

வீடியோவிற்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்! https://twitter.com/arya_offl

Do you like the story?

Please Appreciate the Author by clapping!