ஐந்து நாட்கள் டைம் கேட்ட ரஜினிகாந்த், காரணம் என்ன? | Rajini takes an extra efoorts for Kabali

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (26/04/2016)

கடைசி தொடர்பு:15:22 (26/04/2016)

ஐந்து நாட்கள் டைம் கேட்ட ரஜினிகாந்த், காரணம் என்ன?

தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் உருவாகிவரும் படம் கபாலி. படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

படம் கூலித் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதாம். இப்படத்திற்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டாராம் ரஜினிகாந்த்.  எப்போதும் ஓரிரு தினங்களில் தன் படங்களுக்கான டப்பிங்கை முடித்துவிடும் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்கு ஐந்து நாட்கள் டப்பிங் பேசியதாக சொல்லப்படுகிறது. 

ஏனெனில், படத்தின் காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்த் இந்தக் கேரக்டருக்கு இன்னும் வித்தியாசமான மாடுலேஷன் தேவை. அதனால் கால அவகாசம் தேவையெனக் கூறி பொறுமையாக டப்பிங் கொடுத்து முடித்திருக்கிறார்.

தவிர, ரஜினிக்கு மகளாக நடிக்கும் தன்ஷிகாவும் தன் டப்பிங்கை முடித்துவிட்டார், தற்பொழுது கலையரசனுக்கான டப்பிங் நடந்துவருகிறதாம்.

எப்படியோ, மே 1ம் தேதி டீஸர்  வெளியாகவிருப்பது உறுதி பாஸ்!...  வெயிட் அண்ட் வாட்ச்!!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close