வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (26/04/2016)

கடைசி தொடர்பு:16:12 (26/04/2016)

திரையுலகிலிருந்து புறப்பட்டிருக்கும் இன்னொரு முதலமைச்சர் வேட்பாளர்

நடிகர்கள் பலர் இந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஒரு நடிகர் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதியிலும் வேட்டாளரை நிறுத்தி, இவரும் போட்டியிடவிருக்கிறார்.

2010 வெளியான தைரியம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் குமரன். தொடர்ந்து வருஷநாடு என்னும் படத்திலும், மற்றும் சில பெயரிடப்படாத படங்களில் நடித்துவருகிறார். இவர் அதிமுக சார்பில் ஏற்கெனவே கடந்த தேர்தலில் போட்டியிட்டவர். பின்னர் தனியாக இளைஞர் மற்றும் மாணவர்கட்சியை தொடங்கினார்.

தற்பொழுது 234 தொகுதியிலும் இளைஞர் மற்றும் மாணவர்கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் இந்தக்கட்சிக்குச் சின்னமாக பிரஷர்குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக 125 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக அமைச்சர் கோகுல இந்திராவை எதிர்த்து இளைஞர் மற்றும் மாணவர்கட்சி சார்பாக அக்கட்சித் தலைவரும் நடிகருமான ப.குமரன் போட்டியிடுகிறார்.

கருணாஸ், சரத்குமார், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நடிகர்களைத் தொடர்ந்து இந்த நடிகரும் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்