வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (26/04/2016)

கடைசி தொடர்பு:17:46 (26/04/2016)

ஏ.ஆர்.முருகதாஸ் படம் செப்டம்பரில் ரிலீஸ்

 அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தை சில மாற்றங்களுடன் இந்தியில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அகிரா என்கிற பெயரில் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் சோனாக்ஷிசின்கா கதைநாயகியாக நடித்திருக்கிறார். ராய்லட்சுமி, கொங்கனாசென் உட்பட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தை கடந்தஆண்டு (2015) மார்ச் மாதம் தொடங்கினார்கள்.

கடந்தஆண்டு இறுதியிலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் என எதைப்பற்றியும் எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது.

படத்தை முழுமையாகப் போட்டுப் பார்த்துவிட்டு, படம் சரியாக வரவில்லை என்பதால் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன. அது சம்பந்தமாகப் படக்குழுவினர் எந்தத்தகவலும் சொல்லவில்லை.

இப்போது படத்தின் நாயகி சோனாக்ஷிசின்கா, படம் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். அதாவது இன்னும் ஆறுமாதங்கள் கழித்துப் படம் வெளியாகவிருப்பதாக இப்போது சொல்லியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட படத்தை இவ்வளவு நாட்கள் தள்ளி வெளியிடுவது எதனால் என்று தெரியவில்லை.    

 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்