விஜய்சேதுபதியும் அந்த 11 கேரக்டர்களும்..! | VijaySethupathi LakshmiMenon Next Movie Rekka Shooting Will Start Soon

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (27/04/2016)

கடைசி தொடர்பு:16:10 (27/04/2016)

விஜய்சேதுபதியும் அந்த 11 கேரக்டர்களும்..!

அடுத்தடுத்து பட ரிலீஸூம், ஷூட்டிங்கும் என்று படுபிஸியான நடிகர் என்றால் அது விஜய்சேதுபதியாகத்தான் இருக்கும். இந்த வருடத்தில் 'சேதுபதி', 'காதலும்கடந்துபோகும்' ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அடுத்து 'இறைவி' வெளியாகவிருக்கிறது.

இவை தவிர, ‘தர்மதுரை’,‘இடம்பொருள்ஏவல்’,‘மெல்லிசை’,‘ஆண்டவன்கட்டளை’ உள்ளிட்ட படங்களும் முடிந்து வெளியாகத் தயாராகிவரும் நிலையில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு ரெடியாகிவிட்டார் விஜய்சேதுபதி.

ரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி - லட்சுமிமேனன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படமே “ரெக்கை”. மே 6ம் தேதி இப்படத்திற்கான பூஜையும், தொடர்ந்து மே 11 படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறது படக்குழு. டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை காமன்மேன் பி.கணேஷ் தயாரிக்கிறார்.

ஏற்கெனவே லட்சுமிமேனன் ஹீரோயினாக நடித்த ஜிகர்தண்டா படத்தில் விஜய்சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் வந்தாலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இருவரும் ஜோடிசேருவது இதுவே முதல்முறை.

இப்படம் மட்டுமின்றி, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் என்று விஜய்சேதுபதியின் படங்களின் பட்டியல்  எகிறிக்கொண்டே இருக்கிறது.  

கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்தவருடம் 11 படங்களில் 11 விதமான கேரக்டர்கள்.   நிச்சயம் ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்தாக இருக்கும்.

நீங்க கலக்குங்க விஜய்சேதுபதி!!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close