வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (27/04/2016)

கடைசி தொடர்பு:16:52 (27/04/2016)

வடசென்னைக்கு முன் ஒரு படம் - வெற்றிமாறன் முடிவு

 

தனுஷ் இப்போது கௌதம்மேனன் இயக்கும் எனைநோக்கிப்பாயும்தோட்டா படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப்படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் வடசென்னை படப்பிடிப்பில் கலந்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் திடீரென கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அந்தப்படம் செப்டெம்பரில் தொடங்கும் என்று தனுஷ் அறிவித்துவிட்டார்.

கௌதம் படத்தை முடித்துவிட்டு ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஏற்கெனவே தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அப்படி நடக்கும் பட்சத்தில் வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிகக்குறைவு என்று சொல்லப்படுகிறது. இதனால் வெற்றிமாறன் வடசென்னை படத்துக்கு முன்பாக ஒரு படத்தை இயக்கிவிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் அந்தப்படத்தை விரைவில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை இரண்டு மாதங்களில் முடித்துவிடுவார் என்று சொல்கிறார்கள். அந்தப்படத்தின் படப்பிடிப்பை காரைக்குடி பகுதிகளிலேயே மொத்தமாக முடித்துவிடத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வடசென்னை எப்போது? என்றால் அனேகமாக ஆகஸ்டில் தொடங்கிவிடுவோம் என்று வெற்றிமாறன் தரப்பில் சொல்கிறார்கள்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்