ஒரு மணிநேரத்தில் வைரல் ஹிட்டடித்த மோகன்லால் தம்பதியினரின் ரொமாண்டிக் வீடியோ!

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இன்று தனது 28 வது திருமணநாளைக் கொண்டாடுகிறார். மனைவி சுசித்ராவுடன் அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை, இன்று காலை ரசிகர்களுக்காக பகிர்ந்திருந்தார் மோகன்லால்.


அது மட்டுமல்லாமல் சற்று நேரத்திற்கு முன் மனைவியோடு படகில் பாடிக்கொண்டே செல்வது போல ஒரு ஜாலி வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ஒரு மணிநேரத்தில், ஒரு லட்சம் பார்வையாளர்கள் அந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ளனர்.  

1967ல் வெளியான ’கவளம் சுண்டன்’ என்ற படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஆம்பல் பூவே’ பாடலின் சரணம்தான் மோகன்லால் பாடுவது. 1988 ஏப்ரல் 28, ஒரு வியாழக்கிழமைதான் சுசித்ரா - மோகன்லாலின் திருமணம் நடைபெற்றது. சுசித்ரா, தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர் பாலாஜியின் மகளாவார். இந்த தம்பதிக்கு, ப்ரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். திருமணநாளை வியட்நாமில் மிக நெருங்கிய நண்பர்களோடு கழிக்கும் மோகன்லால், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள இந்த பாசமழை வீடியோ, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!