விஜய், அஜித்தை விட பெரிய ஆள் இவர் தான்... ஆர்.கே.செல்வமணி அதிரடி!

சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் இணைய தலைமுறை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சகாயம் ஐ.ஏ.எஸ், சமுத்திரக்கனி, தங்கர் பச்சான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதில் ஆர்.கே.செல்வமணியை ரோஜாவின் ராஜா எனக்கூறி பேசுவதற்கு அழைத்தனர்.

பேச ஆரம்பித்தவர், ரோஜாவின் ராஜாவாகவே அறியப்பட்ட நான் மக்களாட்சி என்னும் படம் எடுத்த இயக்குநராக இன்னும்  அறியப்படவில்லை. தமிழ் நாட்டு மக்கள் அப்படியான ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த லட்டில் வந்த பூந்தி தானே நீங்களும். எம்ஜிஆர் பேசிய அதே விஷயங்கள் தான் இப்போது உள்ளவர்களும் பேசுகிறார்கள். ஆனால் அன்று அவர் மக்களுக்காக பேசுகிறார் என மக்கள் நம்பினார்கள்.இப்போது நிலையே வேறு நல்லவர்களும், மாணவர்களும்,படித்தவர்களும் அரசியலுக்கு வரவில்லை எனில் ரவுடிகள் தான் நாட்டை ஆள்வார்கள். இது நம் தவறா இல்லை அவர்கள் தவறா சொல்லுங்கள்.

இன்று குடிக்கச் சொல்லும் அரசு மே 19ம் தேதிக்குப் பிறகு குடிக்க வேண்டாம் எனக் கூட சொல்லலாம்.இப்படி நம் வாழ்வே மற்றவர்கள் தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அப்படி இருக்கையில் நம் வாழ்வை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தில் நாம் பங்கெடுக்காமல் இருக்கலாமா?.

ஒரு மனிதர் நேர்மையாக இருந்ததற்காகவே 23 முறை இடம் மாற்றலாகியிருக்கிறார்.இந்த விழாவிற்கு வரும் போது என் வீட்டில் சாப்பிடாமல் இப்படி மதிய சாப்பாட்டு வேளையில் செல்கிறீர்களே என்றனர். அதற்கு இல்லை நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமானவர் வருகிறார் என்றேன். அதற்கு அப்படி யார் வருகிறார் விஜய்யா, என்றனர், இல்லை அவரை விட பெரிய ஆள் இவர், அப்போ அஜித்தா என்றார்களா இல்லை அவரை விடவும் பெரிய ஆள் என்றேன். சகாயம் ஐ.ஏ.எஸ் வருகிறார் என்றேன்.

இன்று கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் எதிர்க்கக் கூடிய ஒரே ஆம்பள இவர் தான். விலைபோகாத மனிதர். நாங்கள் இயக்குநராக ஹீரோக்கள் இண்ட்ரொடக்‌ஷனுக்காக பலவாறு யோசிப்போம். ஆனால் சகாயத்தின் ஒவ்வொரு செயலும் ஒரு ஹீரோவின் இண்ட்ரொடக்‌ஷனாக இருக்கிறது. ஒரு நரபலி கொடுத்த விஷயத்தைக் கண்டறிய ஒரு மனிதர் அங்கேயே கட்டிலைப் போட்டா தூங்குவார்? இப்படி யாராவது ஒரு ஹீரோவுக்கு இண்ட்ரோ சிந்திக்க முடியுமா? நான் அவருக்கு ரசிகர்  என்றவர் படத்தையும், படக்குழுவையும் வாழ்த்தி விடைபெற்றார்.

- ஷாலினி நியூட்டன் -

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!