வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (30/04/2016)

கடைசி தொடர்பு:18:44 (30/04/2016)

கபாலி டீஸரில் என்ன இருக்கிறது? இந்த வார ஃப்ளாஷ்பேக் #WeeklyViral

பேச்சிலர் , குடும்பஸ்தன் ஆகிட்டாரே...வார ஆரம்பமே பாபி சிம்ஹா ரேஷ்மி மேனனின் திருமண வரவேற்பு.பிரபலங்கள் பலரும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி போஸ் கொடுக்க இணையம் வைரலானது. எங்கிருந்தாலும் வாழ்க..

 

பாபிசிம்ஹா, ரேஷ்மிமேனன் திருமண வரவேற்பு ஆல்பம்

சூர்யா முதல் அபிஷேக் பச்சன் வரை என அனைவரையும் ஒன்றிணைத்து விக்ரம் இயக்கிய ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை வீடியோ வெளியானது ஒரே வீடியோவில் அத்தனை நடிகர், நடிகைகள் வந்தாலும் ரசிகர்கள் சாய்ஸ் அந்தக் குட்டிப் பையனுக்குத் தான். சபாஷ் விக்ரம்!

 

சூர்யா, நயன்தாராவை இயக்கிய விக்ரம்! “ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை” சிறப்பு ஆல்பம்!

ந்தப் படமாயினும்  இரண்டே நாட்களில் டப்பிங்கை டக்கென முடித்துவிடும் ரஜினிகாந்த் கபாலி படத்துக்கு ஐந்து நாட்கள் கேட்டு மிகவும் மெனக்கெட்டு டப்பிங் கொடுத்துள்ளார். தலைவா!

ன்னது நான் அஜித் பாட்டை நிறுத்தச் சொன்னேனா... என ஷாக் ஆன விஷால் மீடியா சந்திப்பில் ஐ லவ் தல , ஐ லவ் தளபதி என அதிரடி பதில் சொல்ல, தலதளபதி ரசிகர்கள் மனதில் உயர்ந்த மனிதராக மாறினார் விஷால்!

ற்கனவே நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் ஹ்ரித்திக், கங்கனாவின் பிரச்னையில் சர்ச்சைப் படம் ஒன்று வெளியாகி இன்னும் கொஞ்சம் நெய் ஊற்ற இணைய வாசிகள் மீண்டும் பரபரப்பானார்கள்.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா!

போபியா படத்தின் திகில் டிரெய்லரை வெளியிட்ட ராதிகா ஆப்தே ரஜினி அற்புதமானவர் என நெகிழ்ந்தார். ஆனால் ரசிகர்கள் ராதிகாவின் டிரெய்லரைப் பார்த்து நெகிழ்ந்தார்கள்! இத்தனை நாளா எங்க அம்மணி இருந்த! 

டிரெய்லருக்கு:

ஃபேன் படம் ஷாருக்கானை எதார்த்த நடிகர் தோரணையில் இருந்து மாற்றியுள்ளது. ரஜினி போல் நீங்கள் நீங்களாக இருங்கள். கமலைப் போல் மற்றவர்களாக மாற முயலாதீர்கள் என ராம் கோபால் வர்மா வழக்கம் போல் ட்விட்டரில் கருத்து சொல்ல. காண்டானார்கள் கமல் ரசிகர்கள்! இவருக்கு யாருப்பா ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பிச்சுக் கொடுத்தது!

மோடி ஆட்சிக்கு இரண்டு வயது அதக் கொண்டாடப் போகிறார்கள். சல்மான், ஷாருக், அமீர் என முப்பெரும் கான்களுக்கும் அழைப்புகள் விடுத்துள்ளனர். அபிஷேக் பச்சன் விழாவை ஆரம்பித்து வைக்க இருக்கிறாராம்... ஏ.ஆர்.ரஹ்மான், சாய்னா நெஹ்வால், அஜய் தேவ்கன் என பலருக்கும் அழைப்புகள் சென்றுள்ளன. 

மோடி விழாவில் என்ன ஸ்பெஷல் மேலும் தகவல்களுக்கு க்ளிக்கவும் 

10 வருடங்கள் கழித்து மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில் யாக்கை படத்துக்காக தனுஷ் ஒரு பாடல் பாடவிருக்கிறார். பாடலின் ஆரம்பம், சொல்லித் தொலையேம்மா!

திருமணநாள் ஸ்பெஷலாக மோகன்லால் அவர் மனைவியுடன் இணைந்து ரொமாண்டிக் வீடியோ ஒன்றை வெளியிட ஒரு மணி நேரத்தில் வைரலோ வைரல் ஹிட்டடித்தது!

யாரு உங்கள் மனம் கவர்ந்த மனிதர் என பஞ்சாயத்து கிளம்ப, நமது சினிமா விகடன் நடத்திய சர்வேயில் விஜய்யும், அஜித்தும் முதல் இரண்டு இடங்களை அலங்கரித்தனர். அடுத்ததாக சூர்யா, மற்றும் தனுஷ்

யாரும் எதிர்பாரா வண்ணம் கார்த்திக் சுப்புராஜுடன் தனுஷ் கூட்டணி என அறிவிக்க அட இந்த வருஷம் தனுஷ் காட்ல மழை தான் போங்கன்னு நினைச்சா . கௌதம் மேனன் பேட்டியில அசால்ட்டா சொல்றாரு இந்தியா அளவுல அதிகம் சம்பளம் வாங்கும் பாடகர் நான் தான்னு. அப்போ பொயட்டு தனுஷு!

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி மொமெண்ட் முழுமையாக படிக்க

ஹாய் மச்சான்ஸ் என கண் சிமிட்டும் நமீதா சொன்னது போலவே அதிமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தது மட்டுமின்றி அம்மாவுடன் இணைந்து போட்டோவுக்கும் போஸ் கொடுக்க அரசியல் களம் சூடு பிடித்தது.

பீப் சாங்கா...கேட்ட கேங்கா எது தப்புன்னு அனிருத் பாடல் ரிலீஸ் ஆகி நெட்டை கலக்க .அனிருத் விழுதுகள் ஹோலா அமிகோ சொல்லத் துவங்கியுள்ளனர். இப்போ ஏன் நீங்க பீப் சாங்குக்கு ஆதரவு குடுக்கறீங்க பாஸ்!

 அனிருத்தின் ”ஹோலா அமிகோ” பாடல் விமர்சனத்திற்கு க்ளிக்கவும்! 

ப்பா , ராதிகா ஆப்தேவின் போபியா, இன்டிபென் டன்ஸ் டே:ரிசர்ஜென்ஸ், X- மென் : அபோகலிப்ஸ், அக்‌ஷய் குமாரின் ஹவுஸ் ஃபுல் 3 டிரெய்லர்களும், ஜிவி.பிரகாஷின் எனக்கு இன்னொரு பேர் இருக்கு டீஸரும், இந்த வார புது வரவுகள்...

 

’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ டீசருக்கு

ளையராஜா வைத்த சபாஷ் நாயுடு’வை தலைப்பாக டிக் செய்த கமல் தசாவாதாரம் படத்தின் பல்ராம் நாயுடுவாகவும், ஸ்ருதி மகளாகவும் நடிக்க படம் உருவாக இருக்கிறது. வழக்கம் போலவே படத்துக்கு ஜாதிப் பெயரா என சர்ச்சைகளும் எழுந்துள்ளன!

பிரபலங்கள் கலந்துகொண்ட சபாஷ் நாயுடு படத்தின் துவக்க விழா ஆல்பம்! 

ந்த வாரம் என்ன படம் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டிருக்க அடடே உதயநிதி ஸ்டாலின் படமா இது என நம்மை கொஞ்சம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் இந்த வாரத்தை முடித்து வைத்துள்ளது மனிதன் படம்! வழக்கம் போல இந்தப் படத்துக்கும் டாக்ஸ் சலுகை கிடையாது...

மனிதன் விமர்சனத்திற்கு க்ளிக்கவும் 

டுத்த வாரத்தை அதிரடியாக ஆரம்பிக்கப் போகிறது கபாலி டீசரும், அஜித் பிறந்த நாளும்.. பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் இணைய வாசிகள் என!

ஜிகர்தண்டா , பீட்ஸா புகழ் கார்த்திக் சுப்புராஜ் டீஸரைக் காண ஆவலாக இருப்பதாகவும், மேலும் தனது போன், கணினி என அனைத்தையும் ஆன்லைனில் இணைத்து வைத்துள்ளதாகவும் , நிறுத்தாமல் டீஸரை நாளை முதல் காணப் போவதாகவும் ட்வீட் செய்துள்ளார்... நாங்களும் தான் பாஸ்.. ”டீஸரில் என்ன இருக்கு” எனக் கேட்டால் ரஜினி இருக்காரு என நக்கலடித்த கோலிவுட் வட்டாரத்தில் நாம் ஆட்டயப் போட்ட தகவல் இதுதான்... டீஸர் 65 செகன்ட்ஸாம் சாமியோவ்... 

- ஷாலினி நியூட்டன் -

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்