அட.. சூர்யா '24' படத்தை எங்க பார்க்கப்போறார்னு தெரியுமா?

சூர்யா மகள் தியா, மகன் தேவ் இருவருக்கும் கோடை விடுமுறை விட்டாச்சு. ஹாலிடேவைக் கொண்டாட மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளோடு இன்று இரவு  சென்னை விமானத்தில் புறப்பட்டு அமெரிக்கா செல்கிறார்.  அங்கே விடுமுறையை கழிக்கிறார். 

இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் அதிமான திரையரங்குகளில்  '24' திரைப்படம் மே-6-ம்தேதி ரிலீஸாகிறது. அங்கே முதல்நாள் நடக்கும்  ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டு குடும்பத்தோடு தியேட்டரில்  அமர்ந்து படம் பார்க்கிறார். அதன்பின் மே-15-ம்தேதிவரை அமெரிக்காவில் தங்கி ஒய்வெடுக்கிறார்.

அப்புறம் ஜோதிகா குழந்தைகளோடு  புறப்பட்டு லண்டன் செல்கிறார். அங்கே 15 நாட்கள் ஜோதிகா, தியா, தேவ்வோடு  கோடை விடுமுறையை கொண்டாடுகிறார். ஆக மே மாதம். முழுவதும் வெளிநாட்டு சுற்று பயணத்தில் சூர்யா இருக்கிறார்.

-  சத்யாபதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!