சிம்புவின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா? | Simbu revealed his next moive title

வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (01/05/2016)

கடைசி தொடர்பு:12:26 (01/05/2016)

சிம்புவின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?

சிம்புவின் ' இது நம்ம ஆளு' படத்தில்  நயன்தாரா நடிக்க வேண்டிய ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்க  வேண்டி இருந்தது.  பலமுறை பாண்டிராஜ். டி.ராஜேந்தர், சிம்பு என மும்முனை முயற்சிகள் செய்தும் அனைத்தும் அம்பேல். ஒரு கட்டத்தில் கடுப்பான டி.ஆர்  ' யோவ் பாண்டிராஜ்  அந்த பொண்ணுக்கு என்ன கொம்பு முளைச்சிருக்கா... சிம்புவ வச்சி படத்தை முடிய்யா...' என்று சொல்ல மளமளவென படம் ரெடியாகி விட்டது இப்போது ' மே மாசம் ரிலீஸ் செய்தே தீருவேன்' என்று ப்சங்க மாதிரி அடம்பிடித்துக் கொண்டு இருக்கிறார், பாண்டிராஜ்.

இன்னொரு பக்கம் கெளதம் மேனன் படத்திலும், தே.மு.தி.க-வின் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தயாரிப்பிலும் நடிக்கிறார்.

சிம்பு ஆன்மீக தத்துவங்களை அள்ளிவிட்டாலும் பிடிவாதம் பிடிப்பதில் அப்பாவையே மிஞ்சும் அசகாயசூரர். பீப் பாடல் பிரச்னை ஒரு வழியாக இப்போதுதான் ஓரு வழியாக ஒய்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தனது அடுத்த படத்துக்கு  'AAA' என்று சமூக விழிப்புணர்ச்சிக் கொண்ட தலைப்பைச் சூட்டி வலியபோய் வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார். 

ரவிச்சந்திரன் இயக்கும் 'AAA' படத்துக்கான அர்த்தம் என்ன தெரியுமா?  '    ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று புதிய தலைப்பு வைத்து பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார் சிம்பு.

 -  சத்யாபதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்