கபாலி டீசரில் இந்த ஐந்து விஷயங்களைக் கவனிச்சீங்களா? | 5 things you may missed to notice in #kabaliTeaser

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (01/05/2016)

கடைசி தொடர்பு:16:19 (01/05/2016)

கபாலி டீசரில் இந்த ஐந்து விஷயங்களைக் கவனிச்சீங்களா?

 

வெளியாகி ஐந்து மணி நேரத்தில் நான்கு லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்து, ரசிகர்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் பாண்டிராஜ், ராம் கோபால் வர்மாவெல்லாம் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க, மகிழ்ச்சி.. பெருமகிழ்ச்சி என்கிறார் கபாலி இயக்குநர் பா. இரஞ்சித்.
 

அந்த டீசரில் ஒரு ஐந்து விஷயங்களைக் கவனித்தோம். நீங்களும் கவனியுங்கள்!

  

வழக்கமாக ஜாகுவார், லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸெல்லாம் தான் ‘டான்’கள் உபயோகப்படுத்தும் காராக காண்பிப்பார்கள். இதில் மெர்சிடிஸ் பென்ஸ். ஆமா... படத்துல இது ரஜினி கார்தானா?

மேலே மாட்டப்பட்டிருக்கும் புகைப்படம், அம்பேத்கரின் புகைப்படம் போல, நீல கோட்டுடன் காட்சியளிப்பதை நெட்டிஸன்ஸ் நோட் செய்துவிட்டார்கள்!

ஃப்ளாஷ்பேக்கில் ஸ்டலிஷ் கண்ணாடி, டான் ஆனதும் ரவுண்டட் க்ளாஸ்.

டைட்டிலில், பழங்கால ஓவியங்களுக்கு நடுவே.. ரஜினி!


அது என்ன பாஸ் ப்ளாஸ்திரி.. குண்டடி பட்டு ஹாஸ்பிடல்ல இருந்து வந்து பழி வாங்குவார் போலயே!!

.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்