சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் 61...! | Shivaji productions will produce Vijay's Next film?

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (02/05/2016)

கடைசி தொடர்பு:12:26 (02/05/2016)

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் 61...!

விஜய் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தை விஜயாபுரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது கோடைவிடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க வெளிநாடு சென்றிருக்கிறார் விஜய். அவர் வந்ததும் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள். தொடங்கினால் வேகவேகமாக நடந்து முடிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் தன்னுடைய அடுத்தபடத்துக்கான தயாரிப்புநிறுவனத்தை முடிவுசெய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவரை வைத்துப் படம் தயாரிக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களில் சிவாஜி புரொடக்ஷன்ஸூம் அடக்கம். தங்கள் நிறுவனத்துக்கு ஒருபடம் நடிக்கவேண்டும் என்று கேட்டு அவர்கள் அணுகியதாகவும் அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

அந்தப்படத்தை இயக்கப்போகிறவர் தெறி படத்தை இயக்கிய அட்லிதான் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சிவாஜிபுரொடக்ஷன்ஸ் தரப்பில் கேட்டால், விஜய் சாரிடம் பிரபு சார் பேசியிருக்கிறார், ஆனால் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று சொல்கிறார்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்