Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

மணிரத்னம் படத்திற்காக கார்த்தி எடுக்கும் புதிய பயிற்சி!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்திற்கான முதல்கட்ட வேலைகளில் படக்குழு இறங்கிவிட்டது.

இப்படத்தில் கார்த்தி, விமான ஓட்டியாக நடிக்கிறாராம். இதற்காக விமான ஓட்டிக்கான ஸ்பெஷல் பயிற்சிகளில் ஈடுபடவிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் நாயகியாக அதிதி ராவ் நடிக்கிறார். NRI பைலட்டுக்கும், இந்திய டாக்டருக்குமான காதல் கதையாக இப்படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னம் படமென்றாலே, ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிர, ஒளிப்பதிவாளராக ரவிவர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவிருக்கிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement