கலையுலக சேவைக்காக டாக்டர் பட்டம் பெறுகிறார் நாசர்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரும், நடிகருமான நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது. இவரின் கலைச்சேவையைப் பாராட்டி, வேல்ஸ் பல்கலைக்கழகம் வருகின்ற 7ம் தேதி காலை 9 மணியளவில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கவிருக்கிறது.

நாசர், தன்னுடைய 6வது வயதிலேயே நாடகங்களில் நடித்து, தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்னர், 1985ல் இயக்குநர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் “கல்யாண அகதிகள்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த 30 வருடங்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவின்போது நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறார்கள். விழாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் .P.S.சவ்ஹான் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!