வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (03/05/2016)

கடைசி தொடர்பு:11:45 (03/05/2016)

விஜய் ஓப்பனிங் ஸாங்குடன் தொடங்கியது விஜய் 60

 

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடிக்கும் விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. சென்னை பெரம்பூர் பின்னிமில்லில் பெரியஅளவில் செட் போட்டு படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

ஏப்ரல் பத்தாம்தேதி இந்தப்படத்தின் தொடக்கவிழாவை நடத்தியதோடு இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். அதன்பின்னர் குடும்பத்தோடு இலண்டன் போயிருந்தார் விஜய். மூன்று நாட்களுக்கு முன்பாக அவர் சென்னை திரும்பினார் என்று சொல்லப்படுகிறது.

அதனால் ஏற்கெனவே திட்டமிட்டதில் எந்த மாற்றமும் இல்லாமல் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்களாம். சுமார் இருபத்தைந்துநாட்கள் நடக்கவிருக்கும் இந்தப்படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவிருக்கிறதாம்.

அவருடைய அறிமுகப்பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சி ஆகியனவற்றைப் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் நாயகி கீர்த்திசுரேஷ் கலந்துகொள்ளவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்