ஷங்கரை முந்திய ரஞ்சித்! 'மகிழ்ச்சி' சாதனை

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்ஸன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ. விக்ரம் உடல் எடையை கூட்டியும், குறைத்தும் நடித்திருந்ததால் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அந்த நேரத்தில் அதிகரித்திருந்தது.

செப்டம்பர் 15ம் தேதி 2014ல் ஐ படத்திற்கான 1 நிமிட டீஸர் வெளியாகி வைரல் ஹிட் அடித்தது. தென்னிந்தியாவிலேயே அதிகப் பார்வையாளர்கள் பார்வையிட்ட டீஸர் இதுவாகவே இருந்தது. அந்த டீஸர் சாதனையை மகிழ்ச்சியுடன் முறியடித்துள்ளது ரஜினியின் கபாலி டீஸர்.

ஐ டீஸர் இதுவரை 11,362,659 பேர் பார்த்துள்ளனர், ஆனால் மே 1ம் தேதி வெளியான ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி டீஸரை 11,633,652 பேர் பார்வையிட்டு மகிழ்ச்சியை வியூவ்ஸாக மாற்றியுள்ளனர் ரஜினி ரசிகர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!