வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (07/05/2016)

கடைசி தொடர்பு:13:40 (07/05/2016)

மைனஸ் 10 மினிட்ஸ் - 24 அப்டேட்ஸ்

 விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா சமந்தா உள்ளிட்ட பலர் நடித்த 24 படம் நேற்று வெளியானது. அறிவியல் சார்ந்த புனைகதை என்பதால் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

படம் வெளியான பின்பு படத்துக்கு வரவேற்பும் விமர்சனங்களும் கலந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தின் இரண்டாம்பாதி நீளமாக இருக்கிறதெனப் பல தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் இரண்டாம்பாதியில் சுமார் பத்துநிமிடங்கள் படத்தைக் குறைக்க படக்குழுவினரே திட்டமிட்டிருக்கிறார்களாம். அதைக் குறைத்துவிட்டால் படம் வேகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் தணிக்கைச் சான்றிதழில் படத்தின் நீளம் 164 நிமிடங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டேமுக்கால் மணிநேரம். இப்போது சுமார் பத்துநிமிடங்களைக் குறைத்தால் 154 நிமிடங்களாக இருக்கும்.

இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்டால், படத்தின் நீளத்தைச் சற்றுக் குறைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். எந்தக் காட்சிகளைக் குறைப்பது என்கிற பேச்சுகள் நடக்கின்றன என்று சொல்கிறார்கள்.

இது தொடர்பாக திரையரங்குகள் தரப்பில் கேட்டால், இதுவரை படத்தின் நீளத்தைக் குறைத்துத் திரையிடச் சொல்லி தகவல் வரவில்லை இப்போதுவரை அப்படியேதான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.    

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்