சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு? - ஆங்ரி விஷால் | I Surly Kill Piracy, vishal Says Marudhu Press Meet

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (10/05/2016)

கடைசி தொடர்பு:10:34 (10/05/2016)

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு? - ஆங்ரி விஷால்

குட்டிபுலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையாவின் அடுத்த படம் மருது. விஷால், ராதாரவி, ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி உள்ளிட்டோர் நடிக்க மே 20ல்  மருது திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் ராதாரவியுடன் நடித்த அனுபவம் பற்றியும், திருட்டு விசிடி  பற்றி  காரசாரமாக பேசினார் நடிகர் விஷால்.

இந்தப் படத்தில் எல்லா நடிகர்களும் இருந்தாலும், ரசித்து நடித்த காட்சிகளென்றால் அது ராதாரவி அண்ணனுடன் நடித்து தான். மைன்ட் வாய்ஸா சில நேரங்களில் நான் யோசிப்பதை, வசனங்களா முத்தையா இந்தப் படத்தில் ராதாரவியுடனான காட்சிகளில் மாற்றிக்கொடுத்திருக்கிறார் முத்தையா. என்ன வசனம்னு சொல்லமாட்டேன், படத்தில் பாருங்க என்று ட்விஸ்ட் வைத்தார் விஷால்.

எனக்கும் ராதாரவி அண்ணனுக்குமான காட்சிகளில், கிராமத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் கூட ஏதோ நடக்கப்போகுதுனு எதிர்பார்ப்புடனே இருக்கிறார்கள். எங்க டீம்ல கூட பயந்து பயந்து சொல்லுறாங்க, நடிப்பு வேற, நடிகர் சங்கத் தேர்தல் வேறு. முதல் முறையா ராதாரவி அண்ணனோட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருகிறது.

பைரஸி விஷயத்தைப் பற்றி நான் ஒருவன் தான் மறுபடியும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். 24 படத்தோட விசிடி வந்துவிட்டது, எங்கே சிடி ஆக்குனாங்கன்னுகூட தெரியும். ஆனா யாருமே முயற்சி எடுக்கமாட்டாங்க, ஆனா மருது ரிலீஸாகுது, இந்தப் படத்துக்கான சீடி, ராப்பர் எல்லாம் ரெடியாகிட்டு, மே 19லிருந்து நானும் என் நண்பர்களோட களத்தில் இறங்கப்போறேன். இந்தமுறை நான் விடமாட்டேன். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சங்கம் எதுவாக இருந்தாலும் சரி, நான் ஒற்றைக்காலில் நின்னு இந்த முறை, மருது சிடியை கண்டுபிடித்தால், எந்த தியேட்டரில் படமாக்கியிருக்காங்கன்னு கண்டுபிடிச்சிடுவேன்.

தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுப்பேன், நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மீண்டும் உங்களைச் சந்தித்து என் முடிவு என்னவென்பதைச் சொல்கிறேன். எனக்கு போர் அடித்துவிட்டது. சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும், சட்டை அழுக்கானாலும் பரவாயில்லை.

பொதுச் செயலாளரா கேட்காமல், நடிகனா, சக நடிகர்களுக்காகக் கேட்கிறேன். என்ன ஆனாலும் பரவாயில்லை ஒரு கை பார்த்துவிடுகிறேன். நிச்சயம் ஒன்றிணைந்து பைரஸியை கொன்றே தீரவேண்டும்” என்று முடித்தார் விஷால்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்