Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பின் விடை இதோ வந்துவிட்டது. ரஜினி படத்திற்கான ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கும் படம், தெறி படத்தைத் தொடர்ந்து தாணு தயாரிப்பு, சந்தோஷ்நாராயணன் இசை, ஒளிப்பதிவாளர் முரளி, பிரவீன் கே.எல். எடிட்டிங், இதையெல்லாம் தாண்டி ரஜினியின் மாஸ் தோற்றம் என்று கபாலி உச்சகட்ட எதிர்ப்பார்ப்புடன் ஜூலை 1ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் மலேசியாவின் டான் கதாபாத்திரத்தில் ரஜினி  நடித்திருக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் கபாலி படத்தின் டீஸர் வெளியாகி வைரலோ வைரல் ஹிட் அடித்தது. கபாலிடா.. நெருப்புடா.. என்ற வசனமே இன்றைய ரசிகர்களின் யூத் ஃபார்முலா.. ஸ்டைலிஷ் ரஜினியைக் காண  ஜூலை 1ம் தேதி வரை காத்திருப்போம்.....!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்