வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (14/05/2016)

கடைசி தொடர்பு:15:40 (14/05/2016)

ஹேய் சூப்பரப்பு ...அஜீத்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி?

 வேதாளம் படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கும் அடுத்தபடத்தையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார். அந்தப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் ஜூலையில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே படத்தின் நாயகி உட்பட படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கிறதாம். நடிகர் கருணாகரன் படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அந்த வேடம் மிகவும் பேசப்படக்கூடிய வேடமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் அதில் விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி அவரை அணுகியதாகவும் அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்னைஅறிந்தால் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக அருண்விஜய் நடித்திருந்தார். அதனால் அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இது சம்பந்தமான பேச்சுவாத்தைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்