கமல் பதிலளித்த கேள்வியும்... ரஜினி பதிலளிக்காத கேள்வியும்..! | Kamal answered question and Rajini not answered question!

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (16/05/2016)

கடைசி தொடர்பு:13:22 (16/05/2016)

கமல் பதிலளித்த கேள்வியும்... ரஜினி பதிலளிக்காத கேள்வியும்..!

234 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டசபைக்கு , அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகளைத் தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடிகர் கமல் தன்னுடைய குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். வாக்களித்த பின்னர் தேர்தலில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது. நல்லவர்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தளவுக்கு வாக்கு சதவீதம் ஏறுகிறதோ அந்தளவுக்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது என்று அர்த்தம். வாக்கு சதவீதம் அதிகமாக வேண்டும் என்பது என் விருப்பம். அனைவரும் வாக்களிக்க வேண்டியது நம் கடமை. என் கடமையை நான் செய்துவிட்டேன். அனைவரது கடமையையும் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் காலை ஏழு மணிக்கே வாக்களிக்க வந்துவிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. கண்டிப்பாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்" என்று தெரிவித்தார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி கேட்டதற்கு "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டார்..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்